Monday 25 February 2013

‘ம‘&‘மௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ம‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மகம் ஜெகத்தை ஆளும்; பரணி தரணி ஆளும்
2.    மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
3.    மட்டான போஜனம் மனதுக்கு மகிழ்ச்சி
4.    மடமைக்கு மருந்தில்லை
5.    மடியில் கனம், வழியில் பயம்.
6.    மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற்போல
7.    மண்டையில் எழுதி மயிரால் மறைத்து இருக்கிறது
8.    மண்டையுள்ளவரை சளி போகாது
9.    மண் தோண்டுபவனுக்கு இடமும், மரம் வெட்டுபவனுக்கு நிழலும் தரும்
10.    மண் பிள்ளை ஆனாலும் தன் பிள்ளை
11.    மண்ணைத் தின்றாலும் மறையத் தின்ன வேண்டும்
12.    மணல் அணை கட்டுவதா?
13.    மணலை கயிராய் திரிப்பது
14.    மதியாதார் வாசலை மிதியாதிருப்பது நல்லது
15.    மதியும் அது; விதியும் அது.
16.    மதில் மேல் பூனை போல.
17.    மது உள்ளே மதி வெளியே.
18.    மந்திரத்தால் மாங்காய் விழுமா?
19.    மந்திரி இல்லா யோசனையும், ஆயுதம் இல்லாச் சேனையும் விழும்.
20.    மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
21.    மந்திரிக்கும் உண்டு மதிகேடு
22.    மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
23.    மயிர் சுட்டுக் கரி ஆகுமா?
24.    மயிரிழையில் உயிர் பிழை
25.    மயிரைக்கட்டி மலையை இழு, வந்தால் மலை, போனால் மயிரு.
26.    மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுபவனுக்கு இடமும் கொடுக்கும்.
27.    மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
28.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
29.    மருந்துக்கு மோளச் சொன்னா நிறைய [மண்ணுல] மோளுவா
30.    மருந்தும் விருந்தும் மூணு நாளைக்கு!
31.    மருந்தேயாயினும் விருந்தோடு உண்.
32.    மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதே
33.    மலிந்த சரக்கு கடைத் தெருவுக்கு வரும்
34.    மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்துவான்
35.    மலை முழுங்கி மஹாதேவனுக்கு கதவு அப்பளம்
36.    மலை முழுங்கிக்கு மண்ணாங்கட்டி பச்சடியா?
37.    மலையளவு  சாமிக்குக் கடுகளவு கற்பூரம்.
38.    மலையே விழுந்தாலும் தலையால் தாங்க வேண்டும்
39.    மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்
40.    மலையைப் பிளக்க சிற்றுளி போதும்
41.    மழலைச் செல்வமே ஏழைகளின் செல்வம்
42.    மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் தரும்
43.    மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு
44.    மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
45.    மருந்தே இல்லாத நோயை பொறுத்தே ஆகவேண்டும்
46.    மலையத்தனை சுவாமிக்கு தினையத்தனை பூ.
47.    மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
48.    மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை
49.    மறப்போம், மன்னிப்போம்
50.    மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி.
51.    மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை
52.    மன்னுயிரும் தன்னுயிர்போல நினை
53.    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
54.    மனம் கொண்டது மாளிகை.
55.    மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை
56.    மனம் போல் வாழ்வு
57.    மனம் விரும்புவதை எல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதை எல்லாம் கேட்க நேரிடும்
58.    மனதறியப் பொய் உண்டா?
59.    மனத்தில் பகை; உதட்டில் உறவு.
60.    மனதில் இருக்கும் ரகசியம் மதிகேடனுக்கு வாக்கினிலே
61.    மன முரண்டிற்கு மருந்தில்லை
62.    மனைவி இனியவளானால் கணவன் இனியவன் ஆவான்

மா‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மா பழுத்தால் கிளிக்காம்; வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
2.    மாட்டுக்கு கொம்பு, மனிதனுக்கு நாக்கு.
3.    மா£டம் இடிந்தால் கூடம்
4.    மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
5.    மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா?
6.    மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.
7.    மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
8.    மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி.
9.    மாமியார் மெச்சின மருமகளும் இல்லை; மருமகள் மெச்சின மாமியாரும் இல்லை.
10.    மாமியார் வீடு மஹா சௌக்கியம்
11.    மாமியாரும் ஒருவீட்டு மருமகளே!
12.    மாவில் இருக்கும் மணம், கூழில் இருக்கும் குணம்
13.    மாவுக்கேத்த பணியாரம்
14.    மாரடித்த கூலி மடி மேலே.
15.    மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ்சரி
16.    மாரியல்லாது காரியமில்லை
18.    மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்
19.    மாற்றனுக்கு இடம் கொடேல்
20.    மானம் பெரிதா? உயிர் பெரிதா?
21.    மானைக் காட்டி மானைப் பிடிப்பார்

 மி‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது
2.    மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?
3.    மின்னல் அடிக்காமல் இடி விழுந்தது போல
4.    மின்னுக்கெல்லம் பின்னுக்கு மழை

 மீ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மீகாமன் இல்லாமல் மரக்கலம் ஓடாது
2.    மீதூண் விரும்பேல்
3.    மீன் வலையில் சிக்கும்; திமிங்கலம் சிக்குமா?
4.    மீன் வித்த காசு நாறது.

மு‘ - வரிசையில் பழமொழிகள்

1.    முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
2.    முகஸ்துதியும் ஒரு வசையே
3.    முகத்தில் கரி பூசுவது
4.    முகத்துக்கு முகம் கண்ணாடி
5.    முகம் நல்லா இல்லேன்னா கண்ணாடி என்ன செய்யும்?
6.    முங்கி முங்கி குளித்தாலும் காக்கை அன்னம் ஆகாது.
7.    முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
8.    முட்டையிட்ட கோழிக்குத் தெரியும் வலி
9.    முடியுள்ள சீமாட்டி கொண்டை முடிப்பாள்
10.    முத்துக் குளிக்க நினைப்பவன் மூச்சை அடக்க வேண்டும்
11.    முத்தால் நத்தை பெருமைப் படும்; மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
12.    முதல் கோணல் முற்றும் கோணல்
13.    முதல் தவறை மன்னிப்போம்
14.    முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
15.    முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
16    முப்பது வருடம் வாழ்ந்தவெனும் இல்லை; முப்பது வருடம் தாழ்ந்தவெனும் இல்லை.
17.    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
18.    முயற்சி திருவினையாக்கும்
19.    முயன்றால் முடியாதது இல்லை
20.    முருங்கை பருத்தால் தூணாகுமா?
21.    முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்.
22.    முலை கொடுத்தவள் மூதேவி; முத்தம் கொடுத்தவள் சீதேவி.
23.    முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு?
24.    முழுப்பட்டினியைவிட அரை வயிற்றுக் கஞ்சியே மேல்
25.    முள்மேல் விழுந்த சேலையைப் பார்த்துதான் எடுக்க வேண்டும்.
26.    முள்ளில்லாமல் ரோஜாவா?
27.    முள்ளை முள்ளால் எடு.
28.    முள்ளுக்கு மனை சீவி விடுவார்களா?
29.    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
30.    முற்றும் நனைந்தவனுக்கு ஈரம் ஏது?
31.    முன் ஏர் போன வழி, பின் ஏர்.
32.    முன் கை நீண்டால் முழங்கை நீளும்.
33.    முன் நேரம் கப்பல்காரன்; பின் நேரம் பிச்சைக்காரன்.
34.    முன் வைத்த காலை பின் வைக்காதே!
35.    முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
36.    முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது.
37.    முன்னேறு பின்னேறு

 மூ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மூடமூட ரோகம்
2.    மூடன் உறவு அபாயம்
3.    மூத்தது மோழை; இளையது காளை.
4.    மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்
5.    மூலிகை அறிந்தால் மூவுலகையும் ஆளலாம்

 மெ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மெத்தப் படித்தவன் கடைக்குப்போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
2.    மெத்தப் படித்தவன் சுத்த பைத்தியக்காரன்
3.    மெத்தப் பேசுவான் மிகுந்த பொய்யன்
4.    மெய் சொல்லி கெட்டவனுமில்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
5.    மெய் மூன்றாம் பிறை; பொய் பூரண சந்திரன்.
6.    மெல்ல பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்

 மே‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மேருவைச் சேர்ந்த காகமும் பொன் நிறம்
2.    மேலே எறிஞ்ச கல்லு கீழே வந்துதானே ஆக வேண்டும்.
3.    மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்

மொ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே!
2.    மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்.

மௌ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    மௌனம் கலக நாசினி
2.    மௌனம் சம்மதம்
3.    மௌனம் மலையை சாதிக்கும்

1 comment: