Monday 25 February 2013

‘வ‘-‘வௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘வ‘- வரிசையில் பழமொழிகள்

1.    வசந்தத்தில் உழை; கோடையில் உண்.
2.    வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்
3.    வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணி, அட்டிகையை வைத்து வட்டியை கட்டுவான்.
4.    வட்டிக்கு ஆசை; முதலுக்கு கேடு.
5.    வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
6.    வடக்கே கருத்தால் மழை வரும்.
7.    வண்டு ஏறாத மலர் இல்லை
8.    வண்ணான் கையில் மாற்று.
9.    வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன?
10.    வணங்கின முள் பிழைக்கும்.
11.    வதந்தி ஒரு தீ
12.    வதந்தியை நம்பாதே!
13.    வரவு எட்டணா. செலவு பத்தணா!
14.    வரவுக்குத் தகுந்த செலவு
15.    வருந்தினால் வாராதது இல்லை
16.    வருமுன் காப்பாய்
17.    வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்
18.    வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
19.    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
20.    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
21.    வலியவன் வெட்டியதே வாய்க்கால்
22.    வலியை உணர்ந்தவன் வலியை அறிவான்
23.    வழவழத்த உறவைக்காட்டிலும் வைரம் பாய்ந்த பகை நன்று.
24.    வழியில் கிடக்கிற கொடரியை எடுத்து கால் மேல் போட்டுக்கொள்வானேன்?
25.    வளரும் காய் பிஞ்சிலே தெரியும்
26.    வளரும் பயிர் முளையிலே தெரியும்
27.    வளவனாயினும் அளவறிந்து அளித்துண்

‘வா‘- வரிசையில் பழமொழிகள்

1.    வாக்கு என்னும் கடன்
2.    வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை; போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை.
3.    வாக்கு கெட்ட மாட்டை போக்குல விட்டுத் திருப்பு.
4.    வாக்கு கொடுக்காதே! கொடுத்தால் காப்பாற்று.
5.    வாங்குவதைப் போலிருக்க வேண்டும் கொடுப்பதும்
6.    வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை சீக்கு.
7.    வாதத்திற்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை.
8.    வாதம் ஊதி அறி; வேதம் ஓதி அறி.
9.    வாதம் வயோதிகருக்கு; பிடிவாதம் இளையவர்களுக்கு.
10.    வாய் நல்லதானால் ஊர் நல்லது
11.    வாழ்க்கை ஒரு போராட்டம்
12.    வாழ்வும் தாழ்வும் சில காலம்
13.    வாழ்வும் வீழ்வும் வாயாலே!
14.    வாழைப் பழத்தில் ஊசி ஏற்றினாற்போல
15.    வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு
16.    வாய்ச் சொல் வீரனடி
17.    வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
18.    வாய்மையே வெல்லும்
19.    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்
20.    வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
21.    வாழ்கிறதும் கெடுகிறதும் நம் வாயினால்தான்.
22.    வாழ்வும் தாழ்வும் சில காலம்.
23.    வாழு, வாழ விடு.
24.    வாளினும் கூரியது நாவு.
25.    வானத்து மேலே எறிஞ்ச கல்லு அப்படியே நிற்காது.

‘வி‘- வரிசையில் பழமொழிகள்

1.    விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
2.    விடியும்முன் கும்மிருட்டு
3.    விதி எப்படியோ மதி அப்படி.
4.    விதி என்று உண்டென்றால் விதிவிலக்கு என்றும் உண்டு
5.    விதியை மதியால் வெல்
6.    விதி வலியது
7.    வியாதிக்கு மருந்துண்டு; விதிக்கு மருந்தில்லை.
8.    விரலுக்கேத்த வீக்கம்
9.    விருந்தும் மருந்தும் மூன்று நாள்
10.    விருப்பத்தால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
11.    விரும்பிச் செய்தால் கரும்பாய் இனிக்கும்
12.    விரும்பியது கிட்டா, கிடைத்தது விரும்பு.
13.    விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று மளைக்குமா?
14.    வில்லேந்தியவன் எல்லாம் வீரன் அல்ல.
15.    வில்வப்பழம் தின்பார் பித்தம் போக; பனம்பழம் தின்பார் பசி போக.
16.    விழித்த முகம் சரியில்லை
17.    விளக்கின் அடியில் இருள் மண்டும்
18.    விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலம்
19.    விள்க்கெண்ணெயைத் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்.
20.    விளையும் பயிர் முளையிலே தெரியும்
21.    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

‘வீ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வீட்டிலே எலி, வெளியிலே புலி.
2.    வீட்டிலே புலி, வெளியிலே எலி.
3.    வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை.
4.    வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்.

‘வெ’ - வரிசையில் பழமொழிகள்

1.    வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்
2.    வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
3.    வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
4.    வௌக்கெண்ணெய் தடவிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.
5.    வெளுத்ததெல்லாம் பாலாகுமா? கருத்ததெல்லாம் நீராகுமா?
6.    வெறுங்கை முழம் போடுமா?
7.    வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல

‘வே’ - வரிசையில் பழமொழிகள்

1.    வேண்டாத மனைவி கைபட்டா குத்தம், கால் பட்டா குத்தம்
2.    வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்
3.    வேலியே பயிரை மேய்ந்தால்?
4.    வேலியிலே போன ஓணானை வேட்டிக்குள்ளே விட்டதுபோல
5.    வேலைக்குத் தகுந்த வேஷம் போடு

1 comment: