Saturday 23 February 2013

‘ஆ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஆ வேறு நிறமானாலும் பால் வேறு நிறமாகுமா?
2.    ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கலை.
3.    ஆக்கம் ஊக்கம் தரும்
4.    ஆகக் குழைப்பேன் அரிசியாய் இறக்குவேன்
5.    ஆகாசத்தை வில்லாக வளைத்து மணலைக் கயிறாகத் திரிப்பது
6.    ஆகாசப் பந்தல் போடுவது   
7.    ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
8.    ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மஹத்திக்காரன் சாட்சியா?
9.    ஆகாதவற்றை ஏற்றுக்கொண்டால் ஆய்ந்து ஏற்றுக்கொள்.
10.    ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்றான் குரு.
11.    ஆகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
12.    ஆகுங்காய் பிஞ்சிலேயே தெரியும்
13.    ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
14.    ஆசானுக்கும் அடவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.
15.    ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை.
16.    ஆசை இருக்கு தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
17.    ஆசை உள்ள அளவு அலைச்சலும் உண்டு
18.    ஆசை கண்ணையும் மறைக்கும்; அறிவையும் மறைக்கும்.
19.    ஆசை வெட்கம் அறியாது
20.    ஆட்டாளுக்கு ஒரு சீட்டாள்; அடப்பக்காரனுக்கு ஒரு துடைப்பக் கட்டை.
21.    ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு; ஐயங்காருக்கு மூனு கொம்பு.
22.    ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்தான்
23.    ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறப்பதுபோல்
24.    ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்று சொன்னாள்
25.    ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
26.    ஆடிப்பட்டம் தேடி விதை
27.    ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
28.    ஆடு கொண்டவன் ஆடித் திரிவான், கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
29.    ஆடு கொழுத்தால், இடையனுக்கு லாபம்.
30.    ஆடு கோனானின்றிப் தானாய்ப் போகுமா?
31.    ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
32.    ஆடு மாடு இல்லாதவ்ர் அடை மழைக்கு ராஜா; பிள்ளை குட்டி இல்லாதவர் பஞ்சத்துக்கு ராஜா.
33.    ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்
34.    ஆடையைக் கண்டு எடை போடாதே!
35.    ஆண்ட பொருளுக்கு அறியாதார் செய்த தவம், மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
36.    ஆண்கள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்கா, தங்கச்சி ஒத்திரார்கள்.
37.    ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்
38.    ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரலை.
39.    ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல்
40.    ஆணிக்கு இணங்கிய பொன்னும் மாமிக்கு இணங்கிய பெண்ணும் அருமை
41.    ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யக்கூடாது
42.    ஆணை அடித்து வளர்க்கனும்; பெண்ணைப் போற்றி வளர்க்கனும்.
43.    ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்
44.    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
45.    ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.
46.    ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆத்தோடு போவாரா?
47.    ஆம்படையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பளென்று அழுகின்றேன்.
48.    ஆம்படையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வர வேண்டும்
49.    ஆம்படையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம்
50.    ஆம்படையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா?
51.    ஆபத்துக்கு பாவமில்லை
52.    ஆம்புடையான் செத்து அவதி படும்போது, அண்டை வீட்டுக்காரன் அக்குளிலே பாய்ச்சுகிறான்!
53.    ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்லுவது
54.    ஆயத்திலும் நியாயம் வேண்டும்
55.    ஆயிரம் நட்சத்திரம் ஒரு நிலவுக்கு வருமா?
56.    ஆயிரம் பயிர்கள் வாடி நிற்பது பாசனம் தேடி; ஆயுதம் ஏந்தி ஓங்கி நிற்பது ஆசனம் தேடி.
57.    ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
58.    ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு.
59.    ஆர் குத்தியும் அரிசியானால் சரி
60.    ஆராய்ந்து பாராதான் காரியம்தான் சாந்துயரம் தரும்
61.    ஆரால் கேடு? வாயால் கேடு.
62.    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
63.    ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி, மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்.
64.    ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
65.    ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை
66.    ஆலை கரும்பு போல
67.    ஆலும் வேலும் பல்லுக்குறுத்; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
68.    ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
69.    ஆவல் மாத்திரம் இருந்தென்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.
70.    ஆழம் குறைந்த இடத்தில் ஆற்றைக் கட!
71.    ஆழம் தெரியாமல் காலை விடாதே!
72.    ஆழமற்ற அறிவு சாரமற்று நகைக்கும்
73.    ஆழமான நீரும் அமைதியான நாயும் ஆபத்து
74.    ஆழாக்கு அரிசி, மூவாழாக்குப் பானை, முதலியார் வருகிற வீராப்பைப் பாரு.
75.    ஆழியின் அளவை விட ஆழமானது பெண்ணின் மனது
76.    ஆள் கொஞ்சமானாலும் ஆள் மிடுக்கு.
77.    ஆள் செய்யாத்தை நாள் செய்யும்
78.    ஆள் பாதி; ஆடை பாதி.
79.    ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்
80.    ஆளுக்கொரு குட்டு குட்டினாலும் அவனுக்கு புத்தி வராது.
81.    ஆளுக்கொரு குட்டு குட்டி அடியேன் தலை மிடாப்போல
82.    ஆளை ஆள் அறிய வேண்டும் மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்
83.    ஆளைக்கொண்டு எடை போடாதே!
84.    ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால்
85.    ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பதுண்டு.
86.    ஆற்றிலே போகும் தண்ணீரை அப்பா குடி, ஆத்தா குடி.
87.    ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
88.    ஆற்றிலே தண்ணீர் அலைஅடித்து போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்
89.    ஆற்று நீரை அளந்து குடி, குளத்து நீரை குனிந்து குடி
90.    ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி, ஆற்றைக் கடந்தபின் நீ யாரோ? நான் யாரோ?
91.    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
92.    ஆறின கஞ்சி பழங்கஞ்சி
93.    ஆறினால் அச்சிலே வார், ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
94.    ஆறு காதம் எனும்போதே கோவணத்தை அவிழ்ப்பானேன்?
95.    ஆறு கொண்டது பாதி, தூறு கொண்டது மீதி.
96.    ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
97.    ஆறு போவதே போக்கு; அரசன் சொன்னதே தீர்ப்பு.
98.    ஆறெல்லாம் பாலாக ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்
99.    ஆனாக்க அந்த மடம்; ஆகாட்டி சந்தை மடம்
100.    ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
101.    ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்பதா?
102.    ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்
103.    ஆனைக்கில்லை கானலும் மழையும்
104.    ஆனைக்கும் பானைக்கும் சரி
105.    ஆனைக்கும் அடி சறுக்கும்
106.    ஆனை தழுவிய கையாலே ஆடு தழுவுதோ?
107.    ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே.
108.    ஆனையின் வாய்க்குள் போன கரும்பு போல
109.    ஆனையும் அருகம்புல்லில் தடுக்கும்
110.    ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை

No comments:

Post a Comment