Saturday 23 February 2013

‘இ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    இக்கரைக்கு அக்கரை பச்சை
2.    இஞ்சி தின்ன குரங்குபோல்
3.    இஞ்சி லாபம் மஞ்சளில்.
4.    இட்டதெல்லாம் பயிராகுமா? பெற்றதெல்லாம் பிள்ளயாகுமா?
5.    இட்டுக் கெட்டார் யாருமில்லை
6.    இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே.
7.    இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்
8.    இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பின்னால் ஆகாது.
9.    இடுகிற தெய்வம் எங்கும் இடும்
10.    இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
11.    இமையின் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
12.    இரக்கப் போனாலும் சிறக்கப்போ
13.    இருந்தால் பூனை, நடந்தால் புலி.
14.    இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.
15.    இல்லாமை ஏழ்மையல்ல, பேராசையே ஏழ்மை.
16.    இல்லானை இல்லாளும் வேண்டாள்
17.    இல்லையென்ற உண்மை நாளையென்ற பொய்யைவிட மேல்
18.    இலங்கையில் பிறந்தவனெல்லாம் இராவணன் இல்லை.
19.    இலவு காத்த கிளி
20.    இலையும் பழுப்பும் எங்கும் உண்டு
21.    இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
22.    இளங்கன்று பயமறியாது
23.    இளமையில் சோம்பல், முதுமையில் வருத்தம்
24.    இளமையில் வேகம், முதுமையில் விவேகம்
25.    இரக்கம் இல்லாதவன் நெஞ்சம் இரும்பினும் கொடியது
26.    இரட்டைப் பிறவிகள் போல
27.    இரப்பவனுக்குப் பஞ்சம் என்றுமில்லை.
28.    இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
29.    இரண்டு தப்புகள் ஒரு ஒப்பு ஆகாது
30.    இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு?
31.    இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே!
32.    இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் கேட்டானாம்.
33.    இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பானாம்
34.    இருப்பதை விட்டுட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படாதே!
35.    இரும்பு அடிக்கிற இடத்தில ஈய்க்கு என்ன வேலை?
36.    இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இராது
37.    இருதலைக் கொள்ளி எறும்பு
38.    இருவர் நட்பு ஒருவர் பொறை
39.    இருளில் செய்தது வெளிச்சத்துக்கு வரும்
40.    இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
41.    இறைக்கிற கிணறுதான் சுரக்கும்
42.    இறைக்கிற கிணறு வற்றாது
43.    இறைத்த கேணி ஊறும்; இறையாத கேணி நாறும்.
44.    இறுகினால் களி; இளகினால் கூழ்.
45.    இன்பங்களே வியாதிகளின் பிறப்பிடம்
46.    இன்பத்தைத் தொடரும் துன்பம்
47.    இன்பமும் துன்பமும் எண்ணங்களின் வண்ணங்கள்
48.    இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
49.    இனம் இனத்தோட சேரும்
50.    இனம் இனத்தோடு, பணம் பணத்தோடு
51.     இனம் பிரிந்த மான் போல

No comments:

Post a Comment