Monday 25 February 2013

‘ப‘-‘பௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ப‘- வரிசையில் பழமொழிகள்

1.    பக்கச் சொல் பதினாயிரம்
2.    பக்தி உண்டானால் முக்தி உண்டாகும்
3.    பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே!
4.    பகிர்ந்த வேலை பளுவாயிராது.
5.    பகுத்தறியாமல் துணியாதே! படபடப்பாகச் செய்யாதே!
6.    பகையாளியை உறவாடிக் கெடு
7.    பகைவர் உறவு புகை எழும் நெருப்பு.
8.    பங்குனி என்று பருப்பதுமில்லை; சித்திரை என்று சிறுப்பதுமில்லை.
9.    பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
10.    பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?
11.    பசி உள்ளவன் ருசி அறியான்
12.    பசி வந்தால் சுகி வேண்டாம்; நித்திரை வந்தால் பாய் வேண்டாம்.
13.    பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
14.    பசி ருசி அறியாது
15.    பசித்தார் பொழுதும் போகும்; பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போகும்.
16.    பசித்துப் புசி, ருசித்துக் குடி
17.    பசியாமல் இருக்க மருந்து தருகிறேன், பழஞ்சோறு போடு என்கிறான்.
18.    பசு கருப்பென்றால் பாலும் கருப்பாகுமா?
19.    பசுத்தோல் போர்த்திய புலி
20.    பசு விழுந்தது புலிக்குத் தாயம்.
21.    பசுவிலும் ஏழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
22.    பசுவை அடித்து செருப்பை தானம் கொடுத்தானாம்.
23.    பஞ்சும் நெருப்பும் ஒன்றாய் கிடக்குமா?
24.    பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்
25.    பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்கவல்ல குட்டி
26.    பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
27.    பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்.
28.    பட்டிக்காட்டுக்குச் சிகப்புத் துப்பட்டி பீதாம்பரம்
29.    பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறான்
30.    பட்டுச் சட்டைக்குள் பீதாம்பரம்
31.    பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம்
32.    பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்; காக்காசு கந்தையில் ஓடி உலாவும்.
33.    படிக்கிறது திருவாய் மொழி; இடிக்கிறது பெருமாள் கோயில்.
34.    படுத்துவாரெல்லாம் படுத்த, இந்த கடுத்த வாயுமில்லா கடிக்கு
35.    படுப்பது குச்சு வீட்டில்; கனவு காண்பது மச்சு மாளிகை.
36.    படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
37.    படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.
38.    படையிருந்தால் அரணில்லை
39.    பண்ணப் பண்ண பலவிதம்
40.    பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
41.    பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
42.    பணத்தைப் பார்ப்பதா? பழமையைப் பார்ப்பதா?
43.    பணம் இல்லாதவன் பிணம்
44.    பணம் உண்டானால் மணம் உண்டு.
45.    பணம் குலம் அறியும். பசி கறி அறியும்.
46.    பணம் நமக்கு அதிகாரியா? நாம் பணத்திற்கு அதிகாரியா?
47.    பணம் பத்தும் செய்யும்
48.    பணம் பந்தியிலே கு(ல)ணம் குப்பையிலே!
49.    பணம் பாதாளம் வரை பாயும்
50.    பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
51.    பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்
52.    பத்து பேருக்கு பல் குச்சி, ஒருவனுக்கு தலைச் சுமை.
53.    பத்து பேரோட பதினோராவது ஆளாக இருக்க வேண்டும்
54.    பதவி வர பவிசும் வரும்
55.    பதறாத காரியம் சிதறாது
56.    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழனும்
57.    பந்திக்கு இல்லாத வாழக்காய் பந்தலில் கட்டித் தொங்குது.
58.    பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து.
59.    பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றாலும், இலை பொத்தல் என்கிறான்.
60.    பம்மாத்துக் குளம் அழிஞ்சு போச்சு பயக்கள கூப்பிடு மீன் பிடிக்க
61.    பரணியிலே பிறந்தால் தரணி ஆழ்வான்
62.    பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்
63.    பரு மரத்தை அண்டிய பல்லியும் சாகாது.
64.    பருவத்தே பயிர் செய்.
65.    பல்லாக்கு ஏற யோகம் உண்டு; உன்னி ஏற ஜீவன் இல்லை
66.    பல்லார் முனியப் பயனில சொல்லுவான், எல்லாரும் எள்ளப்படும்.
67.    பல்லு போனால் சொல்லு போச்சு
68.    பல்லு முறியத் தின்ன எல்லு முறிய வேலை செய்!
69.    பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
70.    பல மனிதர்கள்; பல ருசிகள்.
71.    பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்
72.    பழக்கம் வழக்கத்தை மாற்றும்
73.    பழகப் பழக பாலும் புளிக்கும்
74.    பழந்தேங்காயில்தான் எண்ணெய்
75.    பழம் தின்று கொட்டை போட்டவன்
76.    பழம் நழுவி பாலில் விழுந்தது
77.    பழம் பழுத்தால், கொம்பிலே தங்காது.
78.    பழம் பெருச்சாளி
79.    பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்
80.    பழுத்த ஓலையைப்பார்த்து குருத்தோலை சிரித்ததாம்
81.    பழுத்த பழம் கொம்பில் நிற்குமா?
82.    பழுதுபடாது முழுதாய்த் திரும்புவது
83.    பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
84.    பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மேட்டிலே இருந்தா அக்கா!
85.    பறையர் தெருவில் வில்வ மரம் முளைத்தது போல
86.    பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஓராதோ?
87.    பன்றி குட்டி போட்டது போல
88.    பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
89.    பன்றிபின் செல்லும் கன்றும் மலம் தின்னும்
90.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
91.    பனிப் பெருக்கில் கப்பல் ஓட்டுவது போல
92.    பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
93.    பனி பெய்து குடம் நிறையுமா?
94.    பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?
95.    பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல
96.    பனையால் விழுந்தவனை பாம்பு கடித்தது போல
97.    பனையின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் என்றே நினைப்பார்கள்

 பா‘- வரிசையில் பழமொழிகள்

1.    பாசமற்றவன் பரதேசி
2.    பாடப் பாட ராகம்
1.    பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை
2.    பாடுபட்டால் பலனுண்டு
3.    பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு .
4.    பாம்பின் கால் பாம்பறியும்
5.    பாம்பு கடிச்சி படக்குன்னு போக
6.    பாம்புக்குப் பால் வார்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும்.   
7.    பாம்பென்றால் படையும் நடுங்கும்
8.    பாம்பை பாம்பு கடிக்காது
9.    பாவம் ஓரிடம், பழி ஓரிடம்.
10.    பாவி போன இடம் பாதாளம்
11.    பாய் மரம் இல்லா மரக்கலம் போல
12.    பாயுற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னது போல
13.    பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
14.    பார்க்க மறுப்பவன் பெருங்குருடன்; கேட்க மறுப்பவன் வெறும் செவிடன்.
15.    பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி
16.    பார்வையில் இல்லாதவன் மனதிலும் நில்லான்
17.    பாராத உடைமை பாழ்
18.    பால் பசுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்
19.    பாலைக் குடித்தவனுக்கு பாலேப்பம்; கள்ளை குடித்தவனுக்கு கள்ளேப்பம்.
20.    பாலை வனச் சோலை
21.    பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்
22.    பாலும் வெள்ளை; மோரும் வெள்லை.
23.    பாலுமாச்சு; மருந்துமாச்சு.
24.    பானகத் துரும்பு

  பி‘- வரிசையில் பழமொழிகள்

1.    பிச்சை எடுத்தும் சத்துருவின் குடியைக் கெடு
2.    பிச்சை போட்டு கெட்டவன் உண்டா?
3.    பிச்சைக்கு மூத்தது கச்சவடம்
4.    பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு பாப்பிள்ளையா?
5.    பிரிவே சரிவு
6.    பிள்ளை ஒன்று பெறாதவன் உள்ள அன்பை அறியான்
7.    பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே
8.    பிள்ளை பெறப் பெறப் ஆசை, பணம் சேரச் சேர ஆசை.
9.    பிள்ளையார் பிடிக்கப் போயி குரங்காப் போச்சு.
10.    பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்ததாம்
11.    பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டினாற்போல
12.    பிறப்பிலும் இறப்பிலும் அனைவரும் சமம்
13.    பிறவிக் கவி
14.    பிறவிக் குணம் மாறாது
15.    பின்னே என்பதும், பேசாமல் இருப்பதும், இல்லை என்பதற்கு அடையாளம்.

  பீ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பீலி பெய்யினும் அச்சிறுகும்

பு‘- வரிசையில் பழமொழிகள்

1.    புகழ் இழந்தவன் பாதி இறந்தவன்
2.    புத்தி கெட்ட ராஜாவுக்கு மதி கெட்ட மந்திரி
3.    புத்திமான் பலவான் ஆவான்
4.    புதியவனை நம்பி பழையவனை கை விடாதே!
5.    புலி பசிச்சாலும் புல்லைத் தின்னாது
6.    புலி பதுங்குவது பாய்வதற்கே
7.    புலி வந்த கதை போல்
8.    புலி வாலை பிடித்த கதை
9.    புலிக்குப் பிறந்து நகம் இல்லாமல் போகுமா?
10.    புலிக்கு வாலாவதைவிட எலிக்கு தலையாவது மேல்.
11.    புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.
12.    புளிய மரத்தில் ஏறினவன் பற்கூசினால் இஅறங்கி வருவான்

பூ‘- வரிசையில் பழமொழிகள்

1.    பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
2.    பூ விற்ற காசு மணக்குமா? நாய் விற்ற காசு குரைக்குமா?
3.    பூமியைப் போல பொறுமை வேண்டும்
4.    பூசப் பூசப் பொன் நிறம்
5.    பூசனிக்காய் எடுத்தவனை தோளிலே தெரியும்
6.    பூவுக்குள் புயல்
7.    பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
8.    பூனை கொன்ற பாவம் உன்னோடு, வெல்லம் தின்ற பாவம் என்னோடு.
9.    பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு போச்சுன்னு நினைத்ததாம்

பெ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பெட்டிப் பாம்பாய் அடங்கு
3.    பெண் என்றால் பேயும் இரங்கும்
3.    பெண் பிறந்தபோதே புருஷன் பிறந்திருப்பான்
4.    பெண் புத்தி பின் புத்தி
5.    பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
6.    பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
7.    பெண்ணின் கோணல், பொன்னிலே நிமிரும்
8.    பெருங்காயம் வைத்த பண்டம்
9.    பெருமாள் இருக்கும் வரையில் திருநாளும் இருக்கும்
10.    பெருமையும் சிறுமையும் வாயால் வரும்
11.    பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சித்தப்பன்
12.    பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வது போல
13.    பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

பே‘- வரிசையில் பழமொழிகள்
1.    பேச்சில் ராவணன், பின்னர் கும்பகர்ணன்.
2.    பேச்சுக் கற்ற நாய் வேட்டைவ்கு ஆகாது
3.    பேசப் பேச எந்த பாஷையும் வரும்
4.    பேசப் பேச மாசு அறும்
5.    பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை
6.    பேசுமுன் நன்கு ஆலோசி
7.    பேசுர பேச்சில அஞ்சு மாசப் பிள்ளையும் வழுகி விழுந்திரும்
8.    பேய் சிரித்தாலும் ஆகாது; அழுதாலும் ஆகாது.
9.    பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரம் ஏற வேண்டும்
10.    பேர் இல்லா சந்நதி பாழ்; பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
11.    பேராசை பெரு நஷ்டம்
12.    பேனைப் பெருமாளாக்காதே!

  பை‘- வரிசையில் பழமொழிகள்

1.    பைய மென்றால் பனையையும் மெல்லலாம்

பொ‘- வரிசையில் பழமொழிகள்
1.    பொங்கின பால் பொயப்பால்
2.    பொங்கும் காலம் புளி; மங்கும் காலம் மாங்காய்.
3.    பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.
4.    பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லி வீழ்ந்தவனும் இல்லை.
5.    பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடைக்காது.
6.    பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.
7.    பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்
8.    பொய் நின்று மெய்யை வெல்லுமா?
9.    பொய்யான நண்பனைவிட மெய்யான எதிரி மேல்.
10.    பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்கும்.
11.    பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
12.    பொறாமைத்தீ தன்னையே அழிக்கும்
13.   பொறி வென்றவனே அறிவின் குருவாம்   
14.    பொறுத்தார் பூமியாழ்வார், பொங்கினார் காடாள்வார்
15.   பொறுமை அருமருந்து
16.    பொறுமை கடலினும் பெரிது
17.    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
18.   பொன் ஆபரணத்தைக் காட்டிலும் புகழாரம் பெரிது
19.    பொன் குடத்துக்குப் பொட்டு எதற்கு?
20.    பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல

‘போ‘- வரிசையில் பழமொழிகள்
1.    போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
2.    போரோட திங்கிற மாட்டுக்குப் பிடுங்கிப்போட்டு கட்டுமா?
3.    போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
4.    போன ஜுரத்தை புளி இட்டு அழைத்தது போல
5.    போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்

No comments:

Post a Comment