Monday 25 February 2013

‘த‘---‘தௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘த‘---வரிசையில் பழமொழிகள்

1.    தகப்பன் வெட்டின கிணறு என்று தலை கீழாக விழலாமா?
2.    தகப்பனுக்கு கட்ட கோவணம் இல்லையாம்; மகன் தஞாவூர் வரைக்கும் நிலப் பாவாடை போடச் சொன்னானாம்.
3.    தங்கத்திலே புரண்டாலும் கழுதை கழுதைதான்!
4.    தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
5.    தங்கமானாலும் விலங்கு விலங்குதானே!
6.    தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கஞ்சர்
7.    தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
8.    தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் களவெடுப்பான்
9.    தட்டிப் பேசுவார் இல்லேன்னா தம்பி சண்ட பிரசண்டன்
10.    தடவிப் பிடிக்க மயிர் இல்லை, பெயர் மட்டும் சவுரிப்பெருமாள்.
11.    தடி எடுத்தவன் தண்டல்காரன்
12.    தடிக்கு மிகுந்த மிடாவா?
13.    தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
14.    தண்ணீரில் விளைந்த உப்பு தண்ணீரிலேயே கரையும்
15.    தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்
16.    தண்ணீரைக்கூட ஜல்லடையில் வாரலாம், அது உறையும்வரை பொறுத்திருந்தால்.
17.    தண்ணீரையும் தாயையும் பழிக்காதே!
18.    தணிந்த வில்தான் தைக்கும்
19.    தந்தை தாய் பேண்.
20.    தந்தை எவ்வழி தனயன் அவ்வழி.
21.    தம்பியுடையான் படைக்கஞ்சான்.
22.    தயங்கி நிற்பவன் தோற்று நிற்பான்
23.    தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
24.    தருமத்தைப் பாவம் வெல்லாது
25.    தருமம் தலை காக்கும்
26.    தலை இருக்க வால் ஆடலாமா?
27.    தலை எழுத்தைத் தந்திரத்தால் வெல்ல முடியுமா?
28.    தலை கீழாக இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலம் வந்துதான் கூட வேண்டும்
29.    தலை சொறியக் கொள்ளி தானே தேடிக்கொண்டாய்
30.    தலைக்குத் தலை நாயகம்
31.    தலைக்கு மேலே வெள்ளம் ஜாண் போனா என்ன? முழம் போனா என்ன?
32.    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு
33.    தலையை தடவி மூளையை உரிவான்
34.    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்
35.    தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
36.    தலைவன் மயக்கம் அனைவர் மயக்கம்
37.    தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்.
38.    தவளை தன் வாயால் கெடும்
39.    தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
40.    தவறுக்கு வருந்து; தவறே செய்யாமல் இருப்பது அருமருந்து.
41.    தவறே செய்யாதவன் எதுவுமே செய்யாதவன்
42.    தவிட்டுக்கு வந்த கை தனத்துக்கும் வரும்
43.    தவிட்டை நம்பிப் போக சம்பா அரிசியை நாய் கொண்டு போச்சாம்.
44.    தன் உயிர் போல் மன்னுயிர்க்கு இரங்கு
45.    தன் ஊரில் பேச்சு, பிற ஊரில் ஏச்சு.
46.    தன் ஊருக்கு அன்னம்; அயல் ஊருக்கு காகம்.
47.    தன் ஊருக்கு யானை; அயல் ஊருக்குப் பூனை.
48.    தன் கையே தனக்கு உதவி
49.    தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்ப்பானேன்?
50.    தன் நிலத்தில் குறு முயல் தந்தியிலும் வலியது
51.    தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்
52.    தன் வாயாலே தான் கெட்டான்
53.    தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டை சுடும்.
54.    தன் வீட்டுக் கடவைப் பிடுங்கி அடுத்த வீட்டுக்கு வைத்தது போல
55.    தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாதோ?
56.    தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம்
57.    தன்னையே மறப்பவன் உண்மையில் முட்டாள்
58.    தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கு அழகு கொண்டை.
59.    தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்.
60.    தனக்கு தனக்குன்னா, தாச்சீல பதக்கு கொள்ளும்
61.    தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்
62.    தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை செய்ய வேண்டும்.
63.    தனி மரம் தோப்பாகாது

தா‘---வரிசையில் பழமொழிகள்

64.    தாடி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்பது
65.    தாடிக்கு பூச்சுற்றலாமா?
66.    தாம்பும் அறுதல், தோண்டியும் ஓட்டை.
67.    தாமதமானாலும் பரவாயில்லை, நாமாக தவிர்க்காதவரை
68.    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
69.    தாய் சொல் கேளாத பிள்ளை, நாய் வாயில் சேலை.
70.    தாய் தூற்றினால் ஊர் தூற்றும்
71.    தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் உருப்படாது.
72.    தாய்க்குச் சோறு போடுவது ஊருக்குப் புகழ்ச்சியா?
73.    தாய்க்குப் பின் தாரம்
74.    தாய்ப் பாலுக்கு கணக்குப் பார்த்தால் தாலி மிஞ்சுமா?
75.    தாயிற்சிறந்த கோயிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.
76.    தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு.
77.    தாயைப் பார்த்து மகளைக் கொள்.
78.    தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
79.    தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்
80.    தான் கள்வன், பிறரை நம்பான்.
81.    தான் தின்னி பிள்ளை வளர்க்காள்; தவிடு தின்னி கோழி வளர்க்காள்.
82.    தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுரை இல்லை.
83.    தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்தானாம்   
84.    தானாகப் பழுக்காத பழத்தை தடி கொண்டு அடித்தால் பழுக்குமா?
85.    தானாக வந்த சீதேவியை காலால் எட்டி உதைத்தானாம்.
86.    தானிக்கும் தீனிக்கும் சரி
87.    தானும் உண்ணான், பிறருக்கும் கொடான்.
88.    தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.

தி‘---வரிசையில் பழமொழிகள்

89.    திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.
90.    திரள் எலி வளை எடாது
91.    திரிசங்கு சொர்க்கம்
92.    திருட்டு நாய்க்குச் சலங்கை கட்டினாற்போல
93.    திருடனுக்குத் தய்வமே சாட்சி
94.    திருடிக்குத் தெய்வம் இல்லை; அபசாரிக்கு ஆணை இல்லை.
95.    திருநெல்வேலிக்கே அல்வாவா?
96.    திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?
97.    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
98.    திறந்த கதவு துறவியையும் திருடன் ஆக்கும்
99.    திறந்த வீட்டில் நாய் நுழைந்தாற்போல்
1.    தின்ற நஞ்சு கொல்லும், தின்னாத நஞ்சு கொல்லுமா?
2.    தின்ற மண்ணுக்குத் தகுந்த சோகை.
3.    தினவுக்கு சொரிதல் இதம்
4.    தினை விதைத்தவன் தினை அறுப்பான்

தீ‘---வரிசையில் பழமொழிகள்

5.    தீ வினை செய்யில் பேய் வினை செய்யும்
6.    தீக்குக் காற்று உதவியது போல
7.    தீட்டின மரத்திலேயே பதம் பார்த்தது போல்
8.    தீயோர் பொறை, நல்லோர் துயர்
9.    தீரா வழக்குக்கு தெய்வமே துணை.
10.    தீராக் கோபம் பாடாய் முடியும்

 து‘---வரிசையில் பழமொழிகள்

11.    துட்டு வந்து போட்டியிலே விழுந்ததோ, திட்டு வந்து பொடியிலே விழுந்ததோ?
12.    துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
13.    துணிந்தவனுக்கு துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை.
14.    துணிவால் சாதிக்க முடியாத்தை பணிவால் சாதிக்கலாம்
15.    துணிவே துணை
16.    துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே!
17.    துப்பாக்கி முனையில் சமாதானம்
18.    துரும்பு தூண் ஆனால், தூண் என்ன ஆகும்?
19.    துரும்பு தூணைத் தாங்குமா?
20.    துலுக்கர் தெருவில் திருவெம்பாவையா?
21.    துழாவி காய்ச்சாதது கஞ்சியுமல்ல; வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.
22.    துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி; என் கையில் இருக்குது பீச்சாங்கத்தி.
23.    துள்ளுற மாடு பொதி சுமக்காது.
24.    துள்ளும் மான் துள்ளித் துரவில் விழுந்தது
25.    துறவிக்கு வேந்தன் துரும்பு
26.    துன்பமே மனிதனின் உரை கல்
27.    துஷ்டப் பிள்ளைக்கு ஊர் புத்திமதி சொல்லும்
28.    துஷ்டனைக் கண்டால் தூர விலகு

 தூ‘---வரிசையில் பழமொழிகள்

29.    தூக்குனங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல
30.    தூங்குறவனை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா?
31.    தூங்கும் சிங்கத்தை சீண்டாதே!
32.    தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே!
33.    தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
34.    தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
35.    தூரப் போக வேண்டுமோ கீரைப் பாத்தியிலே கையை வைக்க.

 தெ‘---வரிசையில் பழமொழிகள்

36.    தெய்வம் கொடுத்தாலும் பூசாரி விட மாட்டான்
37.    தெரிந்த எதிரி தெரியாத நண்பனைவிட மேல்
38.    தெற்கே அடித்த காற்று திருப்பி அடிக்காதோ?
39.    தென்றல் முத்தி பெருங்காத்தாச்சு
40.    தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது

 தே‘---வரிசையில் பழமொழிகள்

41.    தேசங்கள்தோறும் பாஷைகள் வெவ்வேறு
42.    தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
43.    தேடித் தின்றவர் தெய்வத்துக்கு ஒப்பானவர்
44.    தேடிய மூலிகை காலில் பட்டது போல
45.    தேய்ந்தாலும் சந்தனக் கட்டையின் மணம் போகுமா?
46.    தேரோட போச்சு திருநாளு, தாயோட போச்சு பிறந்த வீடு
47.    தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்து விட்டவனைக் கொட்டும்
48.    தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்
49.    தேன் உண்டானால் ஈ தேடி வரும்
50.    தேன் ஒழுகப் பேசுவான்
51.    தேனும் தினை மாவும் தெய்வத்துக்கு அர்ப்பணம்

 தொ‘---வரிசையில் பழமொழிகள்

52.    தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும்
53.    தொட்டில் பிள்ளைக்கு நடக்குற பிள்ளை நமன்
54.    தொட்டிக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
55.    தொண்டைக்கு கீழே போனால் நரகம்
56.    தொன்மை நாடி, நன்மை விடாதே.

தோ‘---வரிசையில் பழமொழிகள்

57.    தோணி போனாலும் துறை நிக்கும்
58.    தோல் இருக்கச் சுவை விழுங்கு
59.    தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
60.    தோளில் இருந்து செவியைக் கடிப்பான்
61.    தோற்றம் ஏமாற்றம்   

No comments:

Post a Comment