Monday, 25 February 2013

‘ச‘ - 'சோ' --- வரிசையில் பழமொழிகள்

ச‘ ---  வரிசையில் பழமொழிகள்

1.    சங்கு ஆயிரம்கொண்டு வங்காளம் போனாலும் தன் பாவம் தன்னோடு.
2.    சட்டி சுட்டது, கையை விட்டது.
3.    சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
4.    சட்டியில் உள்ளது அகப்பையில் வரும்
5.    சண்ட மாருதத்துக்கு எதிப்பட்ட சருகு
6.    சண்டிக் குதிரை, நொண்டி சாரதி.
7.    சண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு.
8.    சத்தியம் வெல்லும்; அசத்தியம் கொல்லும்.
9.    சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
10.    சந்தியில் அடித்ததற்கு சாட்சி வேறா?
11.    சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.
12.    சந்தேகம் தீரா வியாதி
13.    சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்து சம்சாரம் மேலிட்டது.
14.    சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது
15.    சபையிலே நக்கீரன், அரசிலே விற்சேரன்.
16.    சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானனும்.
17.    சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
18.    சர்க்கரை தின்று பித்தம் போனால் கழிப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?
19.    சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்தது போல
20.    சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும்
21.    சருகைக் கண்டு தணல் அஞ்சுமா?
22.    சளிப் பிடித்ததோ சனிப் பிடித்ததோ?

சா‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    சாக்கடையில் கல்லை விடு எறிந்தால் நம் மீதுதான் தெறிக்கும்.
24.    சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம்
25.    சாகிறவரைக்கும் சங்கடமானால் வாழ்வது எக்காலம்.
26.    சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்.
27.    சாட்டை இல்லா பம்பரம் ஆட்டிவைக்க வல்லது.
28.    சாண் ஏறினால் முழம் சறுக்கும்
29.    சாண் பாம்பானாலும் முழத்தடி வேணும்
30.    சாணம் ஒரு கூடை, ஜவ்வாது பணவிடை.
31.    சாத்தான் வேதம் ஓதுகிறதாம்
32.    சாதம் சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால்?
33.    சாது மிரண்டா காடு கொள்ளாது
34.    சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
35.    சாற்றுக்கு இல்லாத பூசனிக்காய் பந்தலில் ஆடுது

சி‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    சித்தன் போக்கு சிவன் போக்கு.
37.    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
38.    சிம்பிலே வலையாதது தடியிலே வளையுமா?
39.    சிரிக்கும் முகத்தில் சீற்றம் ஒளிந்திருக்கும்
40.    சிரித்தால் கூலி; சேவித்தால் சம்பளம்.
41.    சிரு துளி பெரு வெள்ளம்
42.    சிவ பூஜையில் கரடி
43.    சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்
44.    சிறியார்க்கு இனியது காட்டாதே! சேம்புக்குப் புளிவிட்டு காய்ச்சாதே!
45.    சிறு குழந்தை இல்லாத வீடும் வீடல்ல; சீரகம் இடாத கறியும் கறியல்ல.
46.    சிறு துரும்பும் பல் குத்த உதவும்
47.    சிறு மழை பெரும்புழுதியைத் தணிக்கும்
48.    சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.
49.    சிறுகக் கட்டி பெருக வாழ்!
50.    சிறுக சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.
51.    சிறுமையில் கல்வி சிலைமேல் எழுத்து.
52.    சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடி
53.    சினத்தறுத்த மூக்கு சிரித்தொட்ட ஒட்டுமோ?

 சீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    சீக்கிர புத்தி பலவீனம்
55.    சீதை பிறக்கவும் இலங்கை அழியவும்
56.    சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம், அவள் ஈச்சம் பாயை கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
57.    சீரியர் கெட்டாலும் சீரியரே!
58.    சீவன் போனால் கீர்த்தியும் போகுமோ?
59.    சீனி என்று எழுதி நக்கினால் இனிக்குமா?

 சு‘ ---  வரிசையில் பழமொழிகள்

60.    சுக்கு அறியாத கஷாயம் உண்டோ?
61.    சுகத்துக்குப்பின் துக்கம்.
62.    சுக துக்கம் சுழல் சக்கரம்
63.    சுங்கமும் கூழும் இருக்கத் தடிக்கும்
64.    சுட்ட சட்டி சுவை அறியுமா?
65.    சுட்ட மண்ணும், பச்சை மண்ணும் ஒட்டுமா?
66.    சுட்டாலும் செம்பொன் தன்னொலி கெடாது.
67.    சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
68.    சுடலை ஞானம்
69.    சுண்டக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம்.
70.    சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
71.    சுத்தம் சோறு போடும், எச்சில் இரக்க வைக்கும்.
72.    சுடும்வரை நெருப்பு, சுற்றும்வரை பூமி, போராடும்வரை மனிதன்.
73.    சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
74.    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
75.    சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டாமா?
76.    சுரை இட பாகல் முலைக்குமா?
77.    சுவத்து மேலெ எறிஞ்ச பந்து திரும்ப வந்துதானே ஆக வேண்டும்
78.    சுவர் இருந்தால் சித்திரம் எழுதலாம்.
79.    சுவையான உணவு விரைவாகத் தீரும்
80.    சுற்றத் துணியுமில்லை, நக்கத் தவிடுமில்லை.

 சூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

81.    சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது.
82.    சூரியனை கையால் மறைத்தது போல
83.    சூரியனைக் கண்ட பனி போல
84.    சூரியனைப் பார்த்து நாய் குரைத்ததாம்.

செ‘ ---  வரிசையில் பழமொழிகள்

85.    செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளைக்கு வரும்?
86.    செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப்பகை.
87.    செட்டிச்சி சிங்காரிக்குமுன் பட்டணம் ப்றிபோயிடும்
88.    செடியில் வணங்காததா மரத்தில் வணங்கும்?
89.    செத்த பாம்பை அடி
90.    செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
91.    செம்பு நடமாடினால் குயவன் குடி போய்விடும்.
92.    செய்த வினை செய்தவருக்கு எய்திடும்
93.    செய்யும் தொழில்களில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் ஏதுமில்லை
94.    செருப்பால் அடித்துக் குடையும், குதிரையும் கொடுப்பது.
95.    செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
96.    செருப்புக்காக காலை செதுக்குவார்களா?
97.    செய்வன திருந்த செய்
98.    செல்லும் இடமெல்லம் கற்றவனுக்கு சிறப்பு.
99.    செல்வம் செருக்குது, வாசல் படி வழுக்குது.1.    செல்லும் செல்லாததுக்கும் செட்டியார் இருக்கிறார்.
2.    செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
3.    செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

சே‘ ---  வரிசையில் பழமொழிகள் 

4.    சேத நினைவுக்கு பூதம் சிரிக்கும்
5.    சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொத்தும்
6.    சேற்றிலே செந்தாமரை
7.    சேற்றிலே நட்டு வைத்த கம்பம் போல
8.    சேராத இடம் சேர்ந்தால் துன்பம் வரும்

 சை‘ ---  வரிசையில் பழமொழிகள்

9.    சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

10.    சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
11.    சொர்க்கத்துக்குப் போகும்போது கக்கத்தில் ராட்டினம் எதுக்கு?
12.    சொல் அம்போ வில் அம்போ?
13.    சொல் கேளாப் பிள்ளையால் குலத்துக்கீனம்.
14.    சொல் வல்லவனை வெல்வது அரிது
15.    சொல் வேறு; செயல் வேறு.
16.    சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்கு தலைச்சுமை.
17.    சொல்லிச் செய்வர் நல்லோர், சொல்லாமல் செய்வோர் பெரியோர்.
18.    சொல்லிப் போக வேண்டும் சுகத்துக்கு; சொல்லாமல் போக வேண்டும் துக்கத்துக்கு.
19.    சொல்லியும் செய்யார் அசடர்
20.    சொல்லினும் செயல் உத்தமம்
21.    சொல்வது சுலபம், செய்வது கடினம்
22.    சொல்வார் சொன்னால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு?
23.    சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
24.    சொன்னால் வெட்கம், சொல்லாவிட்டால் துக்கம்.

 சோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    சோம்பல் சோறின்மைக்குப் பிதா.
26.    சோம்பித் த்ரியாதே!
27.    சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோட.
28.    சோம்பேறியின் நாக்கு சோம்பி இருப்பதேயில்லை
29.    சோழியன் குடுமி சும்மா ஆடாது
30.    சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம்

ஜெ‘ ---  வரிசையில் பழமொழிகள் 

31.    ஜென்மக் குருடனுக்கு கண் கிடைத்தாற்போல

No comments:

Post a comment