Saturday 23 February 2013

‘அ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    அக்கம் பக்கம் பாத்துப் பேசு.
2.    அக்கா பண்டம் அரிசி; தங்கச்சி பண்டம் தவிடு.
3.    அக்கா புருஷன் அரை புருஷன்
4.    அக்கா இருக்கும் வரைதான் தங்கச்சி உறவு.
5.    அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
6.    அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை.
7.    அக்கிரஹாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
8.    அக்கினி மழையில் கற்பூர பணம் தொடுத்தாற்போல
9.    அக்கு தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் என்ன?
10.    அக அழகே அழகு
11.    அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
12.    அகட விகடமாய் பேசுகிறான்
13.    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
14.    அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே!
15.    அகதிக்கு ஆகாயம் துணை
16.    அகதிக்கு தெய்வம் துணை
17.    அகதி சொல் அம்பலம் ஏறாது
18.    அகதி தலையில் பொழுது விடியுது
19.    அகதி பெறுவது பெண் பிள்ளை, அதுவும் பூராடம்
20.    அகதியை பகுதி கேக்குதா?
21.    அகந்தை அழிவுக்கு வழி வகுக்கும்
22.    அகப்பட்டுக்கொள்வேன் என்றா கள்ளன் களவெடுக்கிறான்?
23.    அகப்பட்டவனுக்கு அஷ்டமச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒம்பதுல ராஜா.
24.    அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்
25.    அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
26.    அகப்பை பிடிக்கிறவன் பரிமாறினால் முதல் பந்தியென்ன? கடைசி பந்தியென்ன?
27.    அகம் ஏற சுகம் ஏறும்
28.    அகம் மலிந்தால் அஞ்சும் மலியும், அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்
29.    அகல் வட்டம் பகல் மழை
30.    அகல இருந்தால் பகையும் உறவு
31.    அகல இருந்தால் நீள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை
32.    அகல இருந்தால் புகல உறவு
33.    அகல் உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.
34.    அகலக்கால் வைக்காதே!
35.    அகல் வட்டம் பகல் மழை
36.    அக விலை அறியாதவன் துக்கம் அறியான்
37.    அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்   
38.    அகர நாக்காய் பேசுகிறான்
39.    அகோர தபசி விபரீத சோரன்
40.    அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.
41.    அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்
42.    அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
43.    அச்சுறுத்திப்போ! அறிவுறுத்திப்போ!
44.    அசலான் வீட்டில் ஐந்து நாள் பட்டினி கிடப்பான்
45.    அசைந்து தின்னும் யானை; அசையாமல் தின்னும் வீடு.
46.    அஞ்சியவன் கண்ணுக்கு ஆகாசம் பேய்தான்
47.    அஞ்சியவனைக் குஞ்சும் விரட்டும்
48.    அஞ்சியவனைப் பேய் அடிக்கும்
49.    அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ வைக்கும்.
50.    அஞ்சு காசுக்கு குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
51.    அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல்
52.    அட்டையாக ஒட்டிக்கொள்
53.    அடக்கமுடையார் அறிஞர்; அடங்காதவர் கல்லார்.
54.    அடக்கமே பெண்ணுக்கு அழகு
55.    அடக்குமுறை அல்ல அறிவுரை
56.    அடாது செய்தவன் படாது படுவான்
57.    அடாது தடை வரினும் விடாது முன்னேறு
58.    அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்
59.    அடாது மழை பெய்தாலும் விடாது ஊர் போய்ச் சேருவான்
60.    அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை.
61.    அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்
62.    அடிக்கிற கைதான் அணைக்கும்
63.    அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி
64.    அடித்தவன் பின்னால் போகலாம், நடித்தவன் பின்னால் போகாதே!
65.    அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் ஒழுங்காகாது
66.    அடிநாக்கிலே நஞ்சு, நுனிநாக்கிலே அமிர்தமா?
67.    அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குற வழியில் அடக்குவோம்
68.    அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
69.    அடிமை வாழ்வினும் வீர மரணமே மேல்
70.    அடிமை படைத்தால் ஆள்வது கடன்
71.    அடியாத மாடு படியாது
72.    அடியும் பட்டு புளித்த மாங்காயா திங்க வேண்டும்?
73.    அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம்.
74.    அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்
75.    அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுவது போல்
76.    அடுத்துக் கெடுப்பான் கபடன்; தொடுத்துவ் கெடுப்பாள் வேசி.
77.    அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.
78.    அடைப்பைப் பிடுங்கினவனைக் கடிக்கும் பாம்பு.
79.    அண்டத்தில் இல்லாதது பிண்டத்திலா?
80.    அண்டத்தைக் கையில் வைத்து ஆடுவானுக்கு சுண்டைக்காய் மெத்த பாரமா?
81.    அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி
82.    அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்
83.    அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
84.    அண்ணனிடத்தில் ஆறு மாதம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
85.    அண்ணனும் தம்பியும் ஜென்மப் பகைவர்
86.    அண்ணாமலையார் அருளுண்டானல் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
87.    அணில் ஏறவிட்ட நாய் பார்ப்பதுபோல
88.    அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
89.    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
90.    அத்தான் செத்தால் மயிராச்சு; கம்பளி மெத்தை நமக்காச்சு.
91.    அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் புழு.
92.    அத்துமீறிப் போனான், பித்துக்குளி ஆனான்.
93.    அத்தைக்கு மீசை முளைத்தால், அவள் சித்தப்பா.
94.    அததுக்கு ஒரு கவலை, ஐயாவுக்கு எட்டு கவலை.
95.    அதிக ஆசை அஷ்ட தரித்திரம்
96.    அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது
97.    அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால் விடியுமட்டும் திருடலாம்
98.    அதிகாரி வீட்டில் திருடி தலையாரி வீட்டில் வைத்தது போல
99.    அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியையே உடைக்கும்.
100.     அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகாதே!
100.    அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகாதே!
101.    அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையும் தங்கமாகும்
102.    அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும்
103.    அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்
104.    அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல
105.    அப்பச்சி கோவணத்தை பருந்து கொண்டோடுது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுவுது.
106.    அப்பம் என்றால் பிய்த்து காட்ட வேண்டுமா?
107.    அப்பன் மாண்டால் அருமை தெரியும்
108.    அப்பா என்றால் உச்சி குளிருமா?
109.    அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
110.    அம்மண தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.
111.    அம்மா பாடு அம்மணமாம்; பிள்ளை கும்பகோணத்தில் கோ தானமாம்.
112.    அம்பட்டையன் குப்பையை கிளறினால் முடிதான் மிஞ்சும்
113.    அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்.
114.    அமாவாசை சோறு என்றைக்கும் கிடைக்குமா?
115.    அமாவாசை வந்தால் ஐயன்பாடு கொண்டாட்டம்
116.    அமைதியுடைமையே அறிவுடைமை
117.    அயல் வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
118.    அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு
119.    அயலான் வீட்டு நெய்யை ஊற்றிக் கொடுத்தான் கையை.
120.    அயலானுக்கு ஆத்தோரம் பாயும்; உள்ளூர்காரனுக்கு மரத்தடியும் பாயும்.
121.    அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு
122.    அர்த்த ராத்திரியில் குடை பிடிக்காதே!
123.    அரக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லை
124.    அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
125.    அரசன் இல்லா நாடு அச்சில்லாத தேர்.
126.    அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு.
127.    அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
128.    அரசன் வழி அவனி.
129.    அரசன் மகனாகப் பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாகப் பிறப்பதே மேல்.
130.    அரசனை நம்பி புருஷனை இழந்தது போல
131.    அரசனும், நெருப்பும், அரவும் சரி
132.    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
133.    அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
134.    அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான்
135.    அர்ச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன்
136.    அரிசி அழாக்கு ஆனாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
137.    அரிசி உண்டால் வரிசை உண்டாம்
138.    அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்
139.    அருமை இல்லாதவன் வீட்டில் எருமையும் குடி இருக்காது
140.    அருமை மருமகன் தலை போனாலும் போகட்டும், ஆதிகாலத்து ஆட்டுக்கல் போகக்கூடாது.
141.    அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் கிடைக்காது
142.    அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான், குடிக்கிறவன் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்.
143.    அரைகுறை ஞானம் ஆபத்தானது
144.    அரைச்சல்லியை வைத்து எருக்கலையைக் கடந்தது போல
145.    அரைப் பணம் கொடுக்கப் பால்மாறி ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை
146.    அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா?
147.    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது
148.    அலைமோதும்போதே தலை முழுகு
149.    அல்லக்காட்டு நரி பல்லைக் காட்டுவதுபோல
150.    அவ்வை சொல்லுக்கு அச்சம் இல்லை
151.    அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.
152.    அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கோலம்
153.    அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்
154.    அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான்.
155.    அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்
156.    அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி
157.    அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான்
158.    அவன் கையைக் கொண்டே அவன் கண்ணைக் குத்தினான்
159.    அவன் கொஞ்சப் புள்ளியா?
160.    அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்?
161.    அவன் நா அசைய நாடு அசையும்
162.    அவனது மொழியிலேயே பேசு
163.    அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்
164.    அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்பது நல்லது
165.    அழகிய ரோஜா முள்ளுடன் மலரும்
166.    அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன? கழுதை மேய்ந்தால் என்ன?
167.    அழுகிற ஆணையும், சிரிக்கும் பெண்ணையும் நம்பக் கூடாது
168.    அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
169.    அழுதும், பிள்ளை அவளே பெற வேண்டும்
170.    அழையா விருந்தாளியாய் செல்லாதே!
171.    அள்ளாது குறையாது, சொல்லாது பிறவாது.
172.    அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
173.    அளக்கிற நாளி அகவிலை அறியுமா?
174.    அளவுக்கும் மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
175.    அளவோடு உண், வளமோடு வாழ்!
176.    அற்ப அறிவு அல்லற்கிடம்
177.    அற்ப ஆசை கோடித் தவத்தைக் கெடுக்கும்
178.    அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?
179.    அற்பர் சிநேகம் பிராண சங்கடம்
180.    அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்
181.    அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பானாம்
182.    அறங்கெட்ட நெஞ்சு திறங்கெட்டு அழியும்
183.    அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேணும்.
184.    அறிய அறிய கெடுவார் உண்டோ?
185.    அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்
186.    அறிவாளிகள் ஒரு போலவே! முட்டாள்கள் பலவிதம்.
187.    அறிவாளியின் தலை பயிரில்லா நிலம்
188.    அறிவில்லாதவன் உழைப்பு தறி கெட்டோடும் குதிரை
189.    அறிவிலிகளும் அறிவாளர்களே, தங்கள் வாயைத் திறவாத வரையிலே.
190.    அறிவுக்கு எல்லை உண்டு, பேதமைக்கு எல்லையே இல்லை.
191.    அறிவுக்கு முன் செல்லும் நாக்கு, அதை உடையவன் மக்கு.
192.    அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.
193.    அறிவுடையாரை அரசனும் விரும்புவான்
194.    அறுதலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை
195.    அறுப்புக்காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாட்டி.
196.    அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
197.    அன்புள்ள சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்
198.    அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா?
199.    அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இட்டது போல்
200.    அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
201.    அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
202.    அன்ன நடை நடக்கப்போய் காகம் தன் நடையும் கெட்டதாம்
203.    அன்னைக்குதவாதான் யாருக்கும் உதவான்
204.    அனுபவமே அறிவு

                                                                                                           -  இன்னும் வரும் .........

No comments:

Post a Comment