Monday, 25 February 2013

‘ந‘-‘நௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘ந‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நக்குண்டார் நாவெழார்
2.    நகமும் சதையும் போல; உடலும் உயிரும் போல.
3.    நகத்தால் கிள்ள வேண்டியதை கோடாரியால் வெட்டுகிறான்
4.    நஞ்சு நாலு கலம் வேணுமா?
5.    நஞ்சு பிழிந்த சேலை.
6.    நஞ்சு மரமானாலும் நட்டவர் வெட்டார்.
7.    நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி; குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி.
8.    நட்டத்துக்கு ஒருவன்; நயத்துவ்கு ஒருவன்.
9.    நட்டுவன் பிள்ளைக்கு கொட்டிக் காட்ட வேண்டுமா?
10.    நட்பு காலத்தைத் தேய்க்கும்
11.    நடக்க அறியாதவ்னுக்கு நடு வீதி காத வழி.
12.    நடந்த பிள்ளை தவழுதாம் தாயார் செய்த புண்ணியத்தாலே!
13.    நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
14.    நடு ஊரில் நச்சு மரம் பழுத்தற்று
15.    நண்டு கொழுத்தால் வளையில் இராது; தண்டு கொழுத்தால் தரையில் இராது.
16.    நண்டைச் சுட்டு நரியை காவல் வைப்பதா?
17.    நத்தையின் வயிற்றில் முத்து
18.    நம் குடுமி அவன் கையில்
19.    நம்பினாரை நட்டாற்றில் விடலாமா?
20.    நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
21.    நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டா?
22.    நமன் எடுத்துப் போகும்போது நழுவி விழுந்த ஜீவன்
23.    நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உறவுக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்
24.    நயத்திலாவது, பயத்திலாகாது.
25.    நரி கொழுத்தென்ன? காஞ்சீரம் பழுத்தென்ன?
26.    நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.
27.    நரி முன்னே நண்டு குட்டிக் கரணம் போட்டதாம்
28.    நரி வால் கொண்டு கிணற்றின் ஆழம் பார்க்கலாமா?
29.    நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்குமாம்.
30.    நரிக்குட்டிக்கு ஊளையிட பழக்க வேண்டுமா?
31.    நரிக்கு கொண்டாட்டம், நண்டுக்குத் திண்டாட்டம்.
32.    நரியூரை விட்டு புலியூருக்குப் போனேன்; புலியூர் நரியூர் ஆயிற்று.
33.    நரை திரை இல்லை; நமனும் அங்கில்லை.
34.    நல் இணக்கமல்லது அல்லற் படுத்தும்.
35.    நல்ல சேவைக்கு நல்ல பரிசு
36.    நல்ல பொருளை எறியாதே; தேவையெனத் திரியாதே.
37.    நல்ல மரத்தில் புல்லுருவி
38.    நல்ல மாட்டுக்கு ஒரு சோடு
39.    நல்ல வாயன் சம்பாதித்ததை நாற வாயன் சாப்பிட்டான்
40.    நல்ல வேளையில் நாழிப் பால் கறவாத்து கன்று செத்து கலப் பால் கறக்குமா?
41.    நல்ல தொடக்கம் பாதி வெற்றி.
42.    நல்ல நூல் நல்ல நண்பன்
43.    நல்ல பாம்பு ஆடியது கண்டு நாக்குப் பூச்சி ஆடியது
44.    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
45.    நல்லவரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
46.    நல்லவன் என்று பெயரெடுக்க நாள் செல்லும்
47.    நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்கவேண்டும், கெட்டவன் உறவை பத்துப் பணம் கொடுத்து நீக்கவேண்டும்.
48.    நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
49.    நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாத்து போகிற வழியே போகிறது.
50.    நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
51.    நல்லாரை நாவழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்
52.    நல்லிணக்கம் அல்லது அல்லல்படுத்தும்
53.    நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்
54.    நலம் இல்லாத செல்வம் வளமில்லாத வாழ்வு
55.    நன்மை கடைப்பிடி.
56.    நன்றும் தீதும் பிறர் தர வாரா
57.    நன்றே செய், அதுவும் இன்றே செய்
58.    நனைத்துச் சுமக்கலாமா?
59.    நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்கும் சேதம்

நா‘--- வரிசையில் பழமொழிகள் 
 1. நா அசைய நாடே அசையும்.
 2. நாக்கிலே சனி
 3. நாக்கிலே இருக்குது நன்மையும் தீமையும்.
 4. நாக்கு மேலே பல்லுப் போட்டுப் பேசாதே!
 5. நாட்டாள் பெற்ற குட்டி நாகரிகம் பேசவல்ல குட்டி
 6. நாடறிந்த பார்ப்பனுக்கு பூணூல் அவசியமா?
 7. நாடு ஒன்றி வாழில் கேடு ஒன்றும் இல்லை
 8. நாம் ஒருவருக்கு கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்
 9. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்
 10. நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைத்த கிளாக்காய் போல.
 11. நாய் இருக்கும் இடத்தில் சண்டை இருக்கும்.
 12. நாய் கொண்டு போன பானையை யார் கொண்டு போனால் என்னா?
 13. நாய் சந்தைக்குப் போனது போல
 14. நாய் சமுத்திரம் போனாலும் நக்கித்தான் குடிக்கும்
 15. நாய் சிங்கத்துக்கு பட்டம் கட்டியது போல
 16. நாய் பட்ட பாடு தடி அறியும்
 17. நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
 18. நாய் வித்த காசு குரைக்காது.
 19. நாய் வேஷம் போட்டா குறைத்துதான் ஆகனும்
 20. நாய்க்கு ஏன் முழுத் தேங்காய், நடு வீட்டில் உருட்டவா?
 21. நாய்க்கு கடிவாளம் போட்டது போல
 22. நாய்க்குத் தெரியுமா கொக்கு பிடிக்க?
 23. நாய்க்குப் பருத்திக் கடையில் என்ன வேலை?
 24. நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
 25. நாயும் தன் நிலத்தில் மிடுக்கு
 26. நாயை எதிரே வைத்துக்கொண்டு நாம் சாப்பிடுவது போல்
 27. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
 28. நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் விடுவது போல்
 29. நாயைக் கொஞ்சினால் முகத்தை நக்கும்
 30. நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.
 31. நாலாறு கூடினால் பாலாறு.
 32. நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில் சோறு
 33. நாவடக்கம் கற்றவன் நல்லதனைத்தும் கற்றவன்
 34. நாவெனும் கூரிய வாள்
 35. நாவுக்கு இசைந்தது பாவுக்கு இசையும்
 36. நாழி அரிசி ச் சோறுண்டவன் நமனுக்ஷிகு உயிர் கொடான்
 37. நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
 38. நாள் செய்வது நல்லார் செய்யார்.
 39. நாற்பது வயதில் நாய்க் குணம்
 40. நாறும் மீனை பூனை பார்த்தது போல
 41. நான் பிடித்த முயலுக்கு மூணு கால்.

நி‘--- வரிசையில் பழமொழிகள்
 
 1. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்
 2. நித்திய கண்டம் பூரண ஆயுசு
 3. நித்தியங் கிடைக்குமா அம்மாவாசை சோறு?
 4. நித்திரை சத்துரு
 5. நித்திரை சுகம் அறியாது
 6. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
 7. நிலவுக்கும் களங்கம் உண்டு
 8. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
 9. நிழலுடன் துவந்த யுத்தம்
 10. நிறை குடம் தளும்பாது
 11. நிறையக் கேள், குறைவாகப் பேசு!
 12. நின்ற மரம் போனால் நிற்கின்ற மரம் நெடு மரம்
 13. நின்ற வரையில் நெடுஞ்சுவர்; விழுந்த அன்று குட்டிச் சுவர்.
 14. நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போயிற்று

நீ‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்.
2.    நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது
3.    நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
4.    நீர் உயர நெல்லும் உயரும்
5.    நீர் என்று நினைத்தது நெருப்பாய் முடிந்தது
6.    நீர் போனால் மீன் துள்ளுமா?
7.    சிர் மேல் எழுத்து போல
8.    நீரில் குமிழி சரீரம்
9.    நீரிலும் நெருப்பிலும் நுழைவது
10.    நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.
11.    நீலிக்கு கண்ணீர் இமையிலே!
12.    நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நு‘--- வரிசையில் பழமொழிகள்

1.    நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக!
2.    நுணலும் தன் வாயால் கெடும்
3.    நுனிக் கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவதா?

நூ‘ ---வரிசையில் பழமொழிகள்

1.    நூல் இல்லாமல் மாலை தொடுப்பது
2.    நூல் கற்றவனே மேலவன்
3.    நூலளவேயாகும் நுண்ணறிவு
4.    நூற்றுக்கு மேல் ஊற்று; ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப்பெருக்கு.
5.    நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நெடியாரைக் குறியாரை ஆற்றில் அறியலாம்
2.    நெய் முந்தியோ? திரி முந்தியோ?
3.    நெய்க் குடத்தை எறும்பு மொய்த்ததைப் போல
4.    நெய்கின்றவனுக்கு ஏன் குரங்குக் குட்டி?
5.    நெருஞ்சி முள் தைத்தாலும் இருந்து பிடுங்க வேண்டும்
6.    நெருப்பை கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.
7.    நெருப்பைச் சிறியது என்று முந்தானையில் முடியலாமா?
8.    நெருப்பில்லாமல் புகையுமா?
9.    நெருப்பின் அருமை குளிரில் தெரியும்; செருப்பின் அருமை வெயிலில் தெரியும்.
10.    நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா?
11.    நெருப்பு நெருப்பை அணைக்கும்
12.    நெருப்புப் பந்தலில் மெழுகு பொம்மை ஆடுமா?
13.    நெருப்பும் அரசனும் நெருங்காதவரை நண்பர்கள்
14.    நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும்

நே‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நேற்று உள்ளார் இன்று இல்லை
2.    நேர்மையான முகமே உண்மையான சிபாரிசு
3.    நேரம் சரியில்லை என்றால் பருகும் நீரே எமனாகும்
4.    நேருக்கு நேர் போராடு

நை‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நைடதம் புலவர்க்கு ஔடதம்.

நொ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நொடியில் தந்தவன் இருமுறை தந்தவன்
2.    நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
3.    நொறுங்கத் தின்றால் நூறு வயசு

நோ‘ --- வரிசையில் பழமொழிகள்

1.    நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.
2.    நோய் ஒரு பக்கம் இருக்க சூடு ஒரு பக்கம் போட.
3.    நோய் கொண்டார் பேய் கொண்டார்.
4.    நோய்க்கு இடம் கொடேல்.
5.    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
6.    நோயாளிக்கு ஆசை காட்டியது போல
7.    நித்திரை சுகம் அறியாது

No comments:

Post a comment