Monday 25 February 2013

‘க‘ --- ‘கௌ‘ வரிசையில் பழமொழிகள்

‘க‘ ---  வரிசையில் பழமொழிகள்
1.    கங்கையில் படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.
2.    கங்கையில் முழுகினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
3.    கசப்பை அறியான் இனிப்பை அறியான்
4.    கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்
5.    கட்டக் கரிய இல்லாமல் போனாலும் பேரு பொன்னம்மாள்.
6.    கட்டக் கருத்த பாசிக்கு வழி இல்லையாம், பேரு மட்டும் முத்துமாலை.
7.    கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த பாடமும் எத்தனை நாள் வரும்?
8.    கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
9.    கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
10.    கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு பல வீடு.
11.    கடக்க வழியறியாதவனுக்கு நடு வீடு காத வழி
12.    கடப்பாறையை எடுத்து பல் குத்துவது போல
13.    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
14.    கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
15.    கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
16.    கடல் பெருகி மேலிட்டால் கரை ஏது?
17.    கடல் மீனுக்கு நீச்சல் பழகனுமா?
18.    கடல் மீனுக்கு நுழையன் இட்டதே பெயர்
19.    கடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
20.    கடலில் பெருங்காயத்தை கரைத்தது போல
21.    கடலில் மூழ்குபவரைவிடக் கள்ளில் மூழ்குபவர் அதிகம்
22.    கடலுக்கு கரை போடுவார் உண்டோ?
23.    கடலைத் தாண்ட ஆசை உண்டு, கால்வாயைத் தாண்ட கால்கள் இல்லை.
24.    கடன்காரனை ஏற்றக் கழுவுண்டா?
25.    கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
26.    கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
27.    கடன் வாங்கினவன் மறந்தாலும் கடன் கொடுத்தவன் மறக்க மாட்டான்
28.    கடனில்லாக் கஞ்சி கால் வயிறு
29.    கடா பின்வாங்குவது பாய்வதற்கே!
30.    கடிக்கிற நாய் குறைக்காது
31.    கடி கோலில் கட்டிய நாய்
32.    கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
33.    கடுகத்தனை நெருப்பும் போர கொழுத்திவிடும்.
34.    கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
35.    கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது
36.    கடுகு போன இடம் தேடுவார், பூசனிக்காய் போன இடம் தெரியாது
37.    கடுங்காற்று மழையைக் கூட்டும். கடுஞ்சினேகம் பகை கூட்டும்.
38.    கடுஞ்சொல் தயவைக் கெடுக்கும்.
39.    கடும் வியாதிக்கு கடும் மருந்து
40.    கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல
41.    கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது
42.    கண் கண்டது கை செய்யும்
43.    கண் குருடானாலும் நித்திரை குறையுமா?
44.    கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
45.    கண் மண் தெரியாத காதல்
46.    கண்ட பாவனையில் கொண்டையை முடி
47.    கண்டது கேட்டது சொல்லாதே!
48.    கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
49.    கண்டது பாம்பு; கடித்தது கருக்கு மட்டை.
50.    கண்டது காட்சி; பெற்றது பேறு.
51.    கண்டதே காட்சி; கொண்டதே கோலம்.
52.    கண்டால் அச்சம், காணாவிட்டால் வெறுப்பு
53.    கண்டால் ஒரு பேச்சு; காணாவிட்டால் ஒரு பேச்சு.
54.    கண்டால் காமாச்சி நாயகர், காணவிட்டால் காமாட்டி நாயகர்.
55.    கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிர்?
56.    கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை.
57.    கண்ணாடிக்குள் கண்ட பண முடிச்சுப்போல்
58.    கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறிவதா?
59.    கண்ணான பேரைப் புண்ணாக்கலாமா?
60.    கண்ணில் பட்டால் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா?
61.    கண்ணில் எண்ணெய் கரிக்கும்; பிடரியில் எண்ணெய் கரிக்குமா?
62.    கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்
63.    கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
64.    கண்ணிலே மண்ணைத் தூவு
65.    கண்ணுக்குள் சம்மணங்கொட்டுவாள்.
66.    கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
67.    கண்ணை இமை காப்பதுபோல்
68.    கண்ணைக் கெடுத்த தெய்வம் புத்தியைக் கொடுக்கும்.
69.    கணக்கன் கணக்கறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்.
70.    கணக்கன் கணக்கைத் தின்னாவிடில் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.
71.    கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்
72.    கத்தரிக்காய்க்கு கையும் காலும் முளைத்தது போல
73.    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்
74.    கத்தி முனையில் காதலா?
75.    கத்தி பொன் என்று வயிற்றில் குத்துவதா?
76.    கதிரவன் சிலரைக் காயேன் என்குமா?
77.    கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
78.    கதைக்குக் காலும் இல்லை, தலையும் இல்லை.
79.    கந்தையானாலும் கசக்கிக் கட்டு
80.    கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி; கப்பல் கவிழ்ந்தால் பிச்சைக்காரி.
81.    கப்பல்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.
82.    கப்பல் ஏரி பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்?
83.    கப்பல் விட்டு கெட்ட குடி கொட்டை நூற்றால் ஆகுமா?
84.    கம்பத்தில் அஞ்சு ஆனை கட்டுவாள்
85.    கம்பத்தில் ஏறி கரணம் போட்டாலும் கீழே இறங்கி கையேந்த வேண்டும்
86.    கம்பளிமேல் பிசின் போல
87.    கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்காது
88.    கம்மாலையின் நாய் சம்மட்டி தொனிக்கு அஞ்சுமா?
89.    கமரிலே பால் ஊற்றியதுபோல்
90.    கயிற்றைப் பாம்பெனக் கலங்குவது
91.    கயிறு இல்லாத பம்பரம்போல்
92.    கரணம் தப்பினால் மரணம்
93.    கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
94.    கருப்பட்டியிலும் கல் இருக்கும்
95.    கருப்பு வெளுப்பாகாது; கசப்பு இனிப்பாகாது.
96.    கரும்பு இனிது என்று வேரோடு தின்னலாமா?
97.    கரும்பு கசப்பது வாயின் குற்றம்.
98.    கரும்பு கட்டால் கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பு ருசி?
99.    கரும்பு கட்டோடு இருக்க எறும்புதானே வரும்?
1.    கரும்பு தின்னக் கூலியா?
2.    கரும்பு வேம்பாச்சு
3.    கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
4.    கருமத்தை முடிப்பவன் கட்டத்தைப் பாரான்
5.    கருமத்தை முடிப்பவன் கடலை ஆராய்வான்
6.    கரை காணாத தோணி.
7.    கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
8.    கல்யாண வீடு கண்டதும் இல்லை; கொட்டுச் சத்தம் கேட்டதும் இல்லை.
9.    கல்லடிச் சித்தன் போன வழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
10.    கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதே
11.    கல்லாதவரே கண் இல்லாதவர்.
12.    கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நன்று
13.    கல்லிலே நார் உரிப்பது
14.    கல்லுளிமங்கனுக்கு காடுமேடெல்லாம் தவிடுபொடி
15.    கல்லைக்கூடக் கரைக்கலாம் மனதைக் கரைக்கக் கூடாது.
16.    கல்வி அழகே அழகு.
17.    கல்வி இல்லா செல்வம் கற்பில்லா அழகு.
18.    கல்வி கரை இல, கற்பவர் நாள் சில
19.    கல்விக்கு அழகு கசடற மொழிதல்.
20.    கல்விக்கு இருவர்; களவுக்கு ஒருவர்.
21.    கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
22.    கலத்திலே சோற்றைப் போட்டு கையைப் பிசைவது போல
23.    கவலை உடையோருக்கு கண்ணுறக்கம் ஏது?
24.    கழுத்து வரை கடன்
25.    கழுதை குதிரை ஆகுமோ? குதிரை கழுதை ஆகுமோ?
26.    கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
27.    கழுதை மேல் ஏறினால் சுகம் இல்லை.
28.    கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து
29.    கழுதை விட்டை ஆனாலும் கை நிறைய வேண்டும்
30.    கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்த கதை
31.    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
32.    கழுவிக் கழுவிச் சேற்றில் மிதித்ததைப்போல்
33.    கள் விற்று கலப் பணம் சம்பாதிப்பதைவிட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல்.
34.    கள்வன் பெண்சாதி கைம்பெண்சாதி
35.    கள்ள மனம் துள்ளும்
36.    கள்ள மாடு சந்தை ஏறாது
37.    கள்ளமில்லா பிள்ளை உள்ளம்
38.    கள்ளன் அச்சம் காடு கொள்ளவில்லை.
39.    கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்
40.    கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே!
41.    கள்ளிக்கு கண்ணீர் கண்ணிலே; நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
42.    கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
43.    கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
44.    களவெலி வளை எடாது
45.    களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
46.    களையில்லா விளை நிலமா?
47.    களையை முளையிலேயே கிள்ளிவிடு
48.    கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் இனிப்பு
49.    கற்பித்தவன் காப்பாற்றுவான்
50.    கற்பில்லா அழகு மணமில்லா பூ
51.    கற்ற இடத்திலேயே வித்தையைக் காட்டலாமா?
52.    கற்றது கை அளவு, கல்லாதது உலகளவு
53.    கற்றோர் அருமை கற்றோர் அறிவர்
54.    கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
55.    கறக்குற பாலுக்கு உதைக்குது பல்லு போக
56.    கறந்த பால் மடி புகாது
57.    கன்றுக் குட்டியை கட்டச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
58.    கன்றைச் சுமக்க சம்மதித்தால் பசுவை சுமக்க வைப்பார்கள்
59.    கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா?
60.    கன்னியின் அழகு காண்பவர் கண்ணில்
61.    கன மழை பெய்தாலும் கல்லுக்குள் ஈரம் ஏறாது.
62.    கனவில் கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
63.    கனிந்த பழம் தானே விழும்
64.    கனியால் மரத்துக்குப் பெயர்; மகனால் தந்தைக்குப் பெயர்.

கா‘ ---  வரிசையில் பழமொழிகள்

65.    காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல
66.    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
67.    காக்கைக் கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?
68.    காசில்லாதவனுக்கு வராகன் பேச்சு எதுக்கு?
69.    காசுக்கு ஒரு குதிரை; அதுவும் காற்றைப்போல் பறக்க வேண்டும்.
70.    காசைக் கொடுத்து, குத்து மாடு வாங்கினதுபோல்
71.    காட்டில் எரித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும்
72.    காட்டுக்கு எரித்த நிலா, கானலுக்குப் பெய்த மழை.
73.    காட்டுப்பூனைக்குச் சிவராத்திரி விரதமா?
74.    காட்டு மரத்தடியில் நில்லாதே!
75.    காட்டு வாழை வந்தால் வீட்டு வாழை போகும்.
76.    காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்கப் பயமா?
77.    காடு எரிந்தால் சந்தன மரம் வேகாதோ?
78.    காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
79.    காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
80.    காணப்பட்டதெல்லாம் அழியப்பட்டது.
81.    காணி ஆசை கோடி கேடு.
82.    காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.
83.    காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்.
84.    காத வழிப் பேரில்லாதவன் கழுதை.
85.    காதல் வியாதிக்கு மருந்திலை
86.    காதலுக்கு கண்ணில்லை; ஆத்திரத்துக்கு அறிவில்லை
87.    காதுக்கு கடுக்கண் இட்டால் முகத்துக்கு அழகு.
88.    காப்பானுக்குக் கள்ளன் இல்லை
89.    காப்பு சொல்லும் கை மெலிவை.
90.    காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
91.    காய்த்த மரம் கல்லடி படும்
92.    காய்ந்த மரம் துளுக்குமா?
93.    காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
94.    கார்த்திகை பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.
95.    காராம்பசுவின் பால் வெள்ளை
96.    காராம்பசுவுக்குப் புல்லும் ஆம், நந்தவனத்துக்கு களையும் ஆம்.
97.    காரிகை அற்றுக் கவி சொல்வதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று.
98.    காரியம் ஆகும்வரை கழுதை காலைப்பிடி.
99.    காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
1.    கால் காசு பூனை முக்கால் காசு தயிரைக் குடித்தது போல
2.    கால் பிறழ்ந்தாலும் நா பிறழாதே!
3.    காலம் அறிந்து செயல்படு
4.    காலம் செய்வது ஞாலம் செய்யாது.
5.    காலம் போயும் வார்த்தை நிற்கும்; கப்பல் போயும் துறை நிற்கும்.
6.    காலணாவுக்கு நாலு சத்தியம்
7.    காலத்தில் பெய்த மழைபோல்
8.    காலத்திற்கேற்ற கோலம்
9.    காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாம் நுண்சீலை.
10.    காலுக்குத் தகுந்த செருப்பும் கூலிக்குத் தகுந்த உழைப்பும்.
11.    காவடி பாரம் சுமக்குறவனுக்குத்தானே தெரியும்?
12.    காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்
13.    காற்றில் துப்பினால் முகத்தில் விழும்
14.    காற்றில்லாமல் தூசி பறக்குமா?
15.    காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
16.    காற்றுள்ள போதே தூற்று; கரும்புள்ள போதே ஆட்டு.
17.    கான மயிலாட கண்டிருந்த வான்கோழி



கி‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கிட்டாதாயின் வெட்டென மற
19.    கிடப்பது ஒட்டுத்திண்ணையில், கனாக் காண்பது மச்சு மாளிகை.
20.    கிடைப்பது கிடைக்கும்
21.    கிணற்றுக்குத் தப்பி தீயிலே பாய்ந்தான்
22.    கிணற்றுத் தவலைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
23.    கிணறு வெட்ட பூதம் கிளம்பியது
24.    கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல்
 

கீ‘ ---  வரிசையில் பழமொழிகள்

25.    கீர்த்தியால் பசி தீருமா?
26.    கீரியும் பாம்பும் போல
27.    கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க் கடை வேண்டும்
28.    கீரைத் தண்டு பிடுங்க ஏலப்பாட்டு ஏன்?
29.    கீழ் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்
30.    கீழே கிடக்கிற கல்லைத் தூக்கி காலிலே போட்டுக்கொண்டு குத்துதே குடையுதேன்னா எப்படி?
31.    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.
32.    கீறி ஆற்றினால் புண் ஆறும்
 

கு‘ ---  வரிசையில் பழமொழிகள்

33.    குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா?
34.    குசவனுக்கு ஆறு மாதம்; தடிக்காரனுக்கு அரை நாளிகை.
35.    குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்
36.    குட்டையை குழப்பி மீன் பிடிப்பார்
37.    குட்டையைக் குழப்பினால்தான் மீன் பிடிக்க முடியும்
38.    குடத்தில் இட்ட விளக்கு
39.    குடத்தில் பொன் கூத்தாடுமா?
40.    குடம் பாலுக்கு துளி நஞ்சு.
41.    குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
42.    குடலும் கூந்தலும் கொண்டது கோலம்
43.    குடிகாரன் ஏச்சு நிஜமான பேச்சு
44.    குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
45.    குடியிருந்து அறி, வழி நடந்து அறி.
46.    குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர்.
47.    குடிபோன வீட்டில் பெருச்சாளி உலவும்
48.    குடி மதம் அடிபடத் தீரும்
49.    குடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டுன மாதிரி
50.    குண்டு சட்டியில் குதிரை ஓட்டினான்
51.    குணம் மாற்ற குரு இல்லை
52.    குத்துகிற உரல் பஞ்சம் அறியுமா?
53.    குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
54.    குதிரை குருடானாலும், கொள்ளு தின்கிறதில் குறையா?
55.    குதிரைக்கு கொள்ளு வைக்கலாம், அதற்காக நாம் அதை சாப்பிட முடியுமா?
56.    குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை
57.    குந்தித் தின்றால் குன்றும் கரையும்
58.    குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
59.    குப்பை உயர்ந்தென்ன? கோபுரம் தாழ்ந்தென்ன?
60.    குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
61.    குபேரப் பட்டினம் கொள்ளை போனாலும் அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு துடைப்பக் கட்டையும் கையில் அகப்படாது.
62.    கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த்தாம்
63.    கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்கு
64.    குமரிக்கு ஒரு பிள்ளை, கோடிக்கு ஒரு வெள்ளை.
65.    குயவனுக்கு ஆறு மாதம், தடிக்காரனுக்கு அரை நாழி.
66.    குரங்கு கையில் பூமாலை
67.    குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.
68.    குரு இல்லாமல் வித்தையில்லை; முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
69.    குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
70.    குருட்டுக் கண்ணுக்கு குறுணி மையிட்டுமென்ன?
71.    குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல
72.    குருடன் ராஜ பார்வை பார்த்தானாம்
73.    குருடனுக்கு குருடன் கோல் பிடிக்கலாமா?
74.    குருடனுக்குப் பால் கொக்கு போல
75.    குரிவில்லாமல் வித்தையா?
76.    குருவியின் தலையில் பனங்காயை வைத்ததுபோல்
77.    குரைக்கிற நாய் கடிக்காது, கடிக்கிற நாய் குரைக்காது.
78.    குல வழக்கும், இஅடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
79.    குல வித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி.
80.    குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே!
81.    குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தது போல
82.    குளம் காப்பவன் தண்ணீர் குடியானோ?
83.    குளம் வெட்டும் முன்பே முதலை குடி வருமா?
84.    குளத்தில் போட்டுட்டு கிணற்றில் தேடலாமா?
85.    குளிக்கப் போயி சேற்றைத் தடவிக் கொள்வது
86.    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
87.    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
88.    குறத்தி பிள்ளை பெற குறவன் கஷாயம் குடிக்கிறான்
89.    குறை குடம் தளும்பும், நிறை குடம் தளும்பாது.
90.    குறையச் சொல்லி நிறைய அள.
91.    குறையேயில்லாதவன் பிறக்கவே இல்லை
92.    குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவர் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
 

கூ‘ ---  வரிசையில் பழமொழிகள்

93.    கூடவே இருந்து கொள்ளியைச் செருகினாற்போல்
94.    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
95.    கூண்டுப் பறவை மீண்டும் பாடாது
96.    கூத்தாட்டுச் சிலம்பம் படை வெட்டுக்கு ஆகுமோ?
97.    கூத்தாடிக்கு கீழே கண்; கூலிக்காரனுக்கு மேலே கண்.
98.    கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
99.    கூரை ஏறி கோழி பிடிக்காத குருவா வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டுவான்?

1.    கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கை வரும்
2.    கூலியைக் குறைக்காதே! வேலையைக் கெடுக்காதே!
3.    கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்
4.    கூழ் என்றாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
5.    கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம்; குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
6.    கூழுக்கு மாங்காய் தோற்குமோ?
7.    கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை
 

கெ‘ ---  வரிசையில் பழமொழிகள்

8.    கெட்ட காலத்திலும் நல்ல காலம்
9.    கெட்டாலும் செட்டி, கிழிந்தாலும் பட்டு.
10.    கெட்டும் பட்டிணம் சேர்
11.    கெட்டிக்காரன் புழுகு எட்டு நாள் மட்டும்
12.    கெடுக்கினும் கல்வி கேடுபடாது.
13.    கெடு மதி கண்ணுக்குத் தெரியாது.
14.    கெடுவான் கேடு நினைப்பான்
15.    கெண்டையைப் போட்டு வராலை இழு.
16.    கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
17.    கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல
 

கே‘ ---  வரிசையில் பழமொழிகள்

18.    கேப்பார் புத்தி கேட்டு கெடாதே!
19.    கேட்டதெல்லாம் நம்பாதே; நம்பியதையெல்லாம் சொல்லாதே!
20.    கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே.
21.    கேள்விப் பேச்சில் பாதி நிஜம்
22.    கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.
 

கை‘ ---  வரிசையில் பழமொழிகள்

23.    கை கண்ணில் பட்டது என்று கையை வெட்டிப் போடுவதா?
24.    கையிலே காசு வாயிலே தோசை ஆகுமா?
25.    கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலை
26.    கைக்கோளனுக்கு கால் புண்ணும், நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறாது.
27.    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
28.    கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
29.    கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
30.    கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்
31.    கையில் உண்டென்றால் காத்திருப்பர் ஆயிரம் பேர்
32.    கையில் பிடிப்பது துளசி மாலை; கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.
33.    கையிலே காசு; வாயிலே தோசை.
34.    கையூன்றிக் கரணம் போட வேண்டும்.
35.    கையை பிடித்து கள்ளை வார்த்து, மயிரை பிடித்து பணம் வாங்குறதா?
 

 கொ‘ ---  வரிசையில் பழமொழிகள்

36.    கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி.
37.    கொடிக்குச் சுரைக்காய் பாரமா?
38.    கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
39.    கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது
40.    கொடுங்கோல் மன்னவன் நாட்டிலும் கடும்புலி வாழும் நாடு மேல்  
41.    கொடுத்ததைக் கேட்டால் அடுத்ததாம் பகை.
42.    கொண்டவன் தூற்றினால் கண்டவனும் தூற்றுவான்
43.    கொண்டானும் கொடுத்தானும் ஒன்று; கல்யாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
44.    கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?
45.    கொல்லுவதும் சோறு, பிழைப்பதும் சோறு.
46.    கொல்லைப் பாழானாலும் குருவிக்குப் பஞ்சமா?
47.    கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்
48.    கொல்லைக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
49.    கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை; குறவனுக்கு முறையும் இல்லை.
50.    கொள்ளிக்கு எதிர் போனாலும் வெள்ளிக்கு எதிர் போகக்கூடாது.
51.    கொள்ளும் வரை கொண்டாட்டம், கொண்ட பிறகு திண்டாட்டம்.
52.    கொள்ளை அழகும் கள்ள மனமும்.
53.    கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
 

 கோ‘ ---  வரிசையில் பழமொழிகள்

54.    கோடாரிக் காம்பு குலத்துக்கு ஈனன்
55.    கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்.
56.    கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதிருப்பது கோடி பெறும்.
57.    கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
58.    கோடை இடி இடித்தது போல
59.    கோணிக் கோடி கொடுப்பினும் கோணாமல் காணி கொடுப்பது நல்லது.
60.    கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு; பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
61.    கோபம் அற்றால் குரோதம் ஆறும்
62.    கோபம் சண்டாளம்
63.    கோபம் பாவம்
64.    கோவில் பூனை தேவருக்கு அஞ்சுமா?
65.    கோழி குருடாயிருந்தா என்ன? செவிடாயிருந்தா என்ன? குழம்பு ருசியாயிருந்தா சரி.
66.    கோழி மிதித்து குஞ்சு சாகுமா?
67.    கோழி முட்டைக்கு சவரம் செய்தது போல்
68.    கோழி தின்ற கள்வனும் கூட நின்று குலவுகிறான்
69.    கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு
70.    கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.
71.    கோளும் சொல்லி கும்பிடுவானேன்?

No comments:

Post a Comment