Saturday, 23 February 2013

‘ஏ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
2.    ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்
3.    ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்கு புல் பறிக்க என்கிறான்
4.    ஏணைக் கழிக்கு கோணைக் கழி வெட்டுவது
5.    ஏதும் அறியாதான் எதையும் ஐயுறான்
6.    ஏமாந்த சோணகிரி
7.    ஏரி நிறைந்தால் கரை கசியும்
8.    ஏமாந்தால் நாமம் போடுவான்
9.    ஏவா மக்கள் மூவா மருந்து
10.    ஏவுகின்றவனுக்கு வாய்ச்சொல், செய்கின்றவனுக்கு தலைச் சுமை.
11.    ஏழ்மையில் கொடுமை கடன் தொல்லை
12.    ஏழையென்றால் இளக்காரம்
13.    ஏழைக்கேத்த எள்ளுருண்டை
14.    ஏழை சொல் அம்பலம் ஏறாது
15.    ஏற்றம் உண்டென்றால் இறக்கமும் உண்டு
16.    ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால்  நொண்டிக்குக் கோபம்.
17.    ஏறப்படாத மரத்தில் எண்ணப்படாத் காய்
18.    ஏறவிட்டு ஏணியை வாங்கினது போல

No comments:

Post a Comment