Saturday 23 February 2013

‘உ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது
2.    உள்ளங்கை நெல்லிக்கனி போல
3.    உள் வீட்டுக் கடனும் உள்ளங்கை சிரங்கும்
4.    உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்
5.    உஞ்சவிருத்திக்காரனுக்கு அஞ்சு பெண்டாட்டி
6.    உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலில் சீதேவி.
7.    உட்கார்ந்து படுத்துக் கொள்ள வேண்டும்
8.    உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை.
9.    உடல் ஒருவனுக்கு பிறந்தது, நாக்கு பலருக்கு பிறந்தது.
10.    உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா?
11.    உடம்புபோனால் போகிறது, கை வந்தால் போதும்
12.    உடாப் புடவையை வண்டூதும்
13.    உடுத்து கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.
14.    உடைந்த பானை ஒட்டாது
15.    உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
16.    உடையவனில் கைப் பற்றியவன் மிடுக்கன்
17.    உண்டார் மேனி கண்டால் தெரியும்
18.    உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு
19.    உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது
20.    உண்டு ருசி கண்டவனும் விட மாட்டான்; பெண்டு ருசி கண்டவனும் விட மாட்டான்.
21.    உண்மை ஒரு நாள் வெளி வரும்
22.    உண்மை சுடும்
23.    உண்மையே பேசுவார் உன்மத்தரும், மூடரும்.
24.    உத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணியது போல
25.    உத்யோகம் புருஷ லட்சணம்
26.    உத்தியோகத்திற்கேற்ற சுகம்
27.    உப்பிட்டவரை உள்ளளவும் நினை
28.    உப்பைத் தின்னவன் தண்ணீ குடிப்பான்
29.    உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
30.    உயிருள்ளவரை போராடு
31.    உயிருள்ளவரை நம்பிக்கை
32.    உயிரோடு இருக்கும்போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை, ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
33.    உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டது
34.    உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
35.    உரியில் தயிர் இருக்க ஊரெங்கும் போனானாம்
36.    உலகம் பல விதம்
37.    உழவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது
38.    உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.
39.    உழுகிறவன் இஅளப்பமானால் எருது மச்சினம் கொண்டாடும்
40.    உழைக்காத செல்வம் நிலைக்காது
41.    உழைப்புக்குப்பின் களிப்பு
42.    உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்திற்கு உலகம் பேய்
43.    உழக்கு மிளகு கொடுப்பானேன், ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன்?
44.    உள்ளக்கருத்தை வள்ளல் அறியும்
45.    உள்ளங்கை நெல்லிக்கனி
46.    உள்ளது போகாது; இல்லாதது வாராது.
47.    உள்ளதை உள்ளபடி சொல்
48.    உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண்
49.    உள்ளம் தீ எரிய, உதடு பழம் சொரிய.
50.    உளவு இல்லாமல் களவு இல்லை.
51.    உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
52.    உரலில் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கைக்கு பயந்தால் முடியுமா?
53.    உரியில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
54.    உரு ஏறத் திரு ஏறும்
55.    உருட்டும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
56.    உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
57.    உற்சாகம் கொண்டு மச்சைத் தாவுகிறான்
58.    உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
59.    உறுதியான உடலில் உறுதியான மனது
60.    உன் சொல்லுக்கு உப்புமில்லை, புளியுமில்லை.
61.    உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா?

No comments:

Post a Comment