Saturday 23 February 2013

‘எ‘ - வரிசையில் பழமொழிகள்

1.    எங்கப்பன் குதிருக்குள் இல்லை
2.    எங்க வீட்டுக்கு வந்தா என்ன கொண்டு வருவாய்? உங்க வீட்டுக்கு வந்தா என்ன கொண்டு தருவாய்?
3.    எங்கே புகை உண்டோ அங்கே அழலுண்டு
4.    எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்
5.    எச்சிலைக் குடித்து தாகம் தீருமா?
6.    எட்டாப்பூ தெய்வத்துக்கு
7.    எட்டி பழுத்தென்ன? ஈயார் வாழ்ந்தென்ன?
8.    எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்பட்டது.
9.    எட்டினால் குடுமியைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.
10.    எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லாக்கு.
11.    எடுப்பார் கைப்பிள்ளை
12.    எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் மெத்த உண்டு.
13.    எண் சாண் உடம்பு ஒரு சாண் ஆனேன்
14.    எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்
15.    எண் மிகுந்தவனே திண் மிகுந்தவன்
16.    எண்ணமெல்லாம் பொய்யாகும், லிகிதம் மெய்யாகும்.
17.    எண்ணிச் செய் செட்டு, எண்ணாமல் செய் வேளாண்மை.
18.    எண்ணிச் செய்பவன் செட்டி, எண்ணாமல் செய்பவன் மட்டி.
19.    எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு
20.    எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பொன்னாகுமா?
21.    எத்தனை நாடுகளோ அத்தனை வழக்கங்கள்
22.    எத்தனை விளக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
23.    எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்!
24.    எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
25.    எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கை அறுத்துக் கொள்ளுகிறது போல.
26.    எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?
27.    எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
28.    எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல
29.    எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
30.    எரிகிற வீட்டிலே பிடுங்கிறவரை லாபம்.
31.    எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
32.    எருமை வாங்கும் முன் நெய்க்கு விலை பேசாதே.
33.    எருது இல்லாது இருந்தால் பசு பத்தினி
34.    எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
35.    எருவுக்குப் போனவன் எலுமிச்சம்பழம் எடுத்தது போல
36.    எல்லா ஆறுகளும் சங்கமிக்கும் கடலிலே.
37.    எல்லாம் அறிந்தவனும் இல்லை, எதுவுமே அறியாதவனும் இல்லை.
38.    எல்லோரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
39.    எல்லோரும் மனிதரா? கல்லெல்லாம் மாணிக்க கல்லா?
40.    எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
41.    எல்லோருக்கும் சனியன் துரும்பு போல, எனக்கு சனியன் எருமை போல.
42.    எல்லோருக்கும் நல்லவன் இதுவரை பிறக்கவில்லை
43.    எலி அம்மணத்தோடு போகிறதாம்.
44.    எலி அழுதால் பூனை விடுமா?
45.    எலி புற்றெடுக்க பாம்பு குடி புகும்.
46.    எலி வளையானாலும் தனி வளைதான்
47.    எலி வேட்டைக்குத் தவிலடியா?
48.    எலி தலையில் கோடாரி விழுந்தது போல.
49.    எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?
50.    எலிக்கு பிராண அவஸ்தை, பூனைக்கு கொண்டாட்டம்
51.    எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
52.    எழுதா விதிக்கு அழுதால் வருமா?
53.    எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்
54.    எழுதுகிறது பெரிதல்ல, இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
55.    எழுதுனவன் ஏட்டக் கெடுத்தான், படிச்சவன் பாட்டக் கெடுத்தான்
56.    எள் என்பதற்கு முன் எண்ணெய்யாய் வந்து நிற்பான்
57.    எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துனி
58.    எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
59.    எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்த்ரம் ஏகப் பெருவெள்ளம்
60.    எறும்பும் தன் கையால் எண் ஜாண்.
61.    எறும்பூர கல்லும் தேயும்

No comments:

Post a Comment